Home One Line P2 ஆஸ்ட்ரோ : ஜனவரி 10 வரையிலான நிகழ்ச்சிகளின் சில சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : ஜனவரி 10 வரையிலான நிகழ்ச்சிகளின் சில சிறப்பம்சங்கள்

638
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் ஜனவரி 10, 2021 வரையிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு :

புதன், 30 டிசம்பர்

யார்? (புதிய அத்தியாயங்கள் – 21-22)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

ஷமீனை ஏற்றுக்கொள்வதற்கான அவரது நிபந்தனைகளைப் பற்றி யாழினியிடம் அவரின் தாய் தெரிவிக்கிறார்.

மூன்றாவது கண் (புதிய அத்தியாயங்கள் – 12-13)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிறவிக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

ஸ்ரீ விசாரிக்கப்பட்டதை அறிந்தவுடன் சத்யவீர் ஒரு முக்கியமான விவரத்தை நினைவில் கொண்டு ஸ்ரீயைச் சந்திக்க விரைகிறார்.

வியாழன், 31 டிசம்பர்

குலாபோ சீதாபோ (Gulabo Sitabo) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிறவிக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா & ஃபரூக் ஜஃபார்

சூழ்ச்சிகளைக் கொண்ட இரண்டு மனிதர்கள் ஒரு மேம்பாட்டு விளையாட்டில் சிக்கிக் கொள்கின்றனர். ஒவ்வொருவருக்கும் சுய நோக்கம் இருக்கையில் பிற உறுப்பினர்களை தங்கள் கைவசம் ஈர்க்கின்றனர்.

அவாரா பாகல் திவானா (Awara Paagal Deewana) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), பிற்பகல் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, அப்தாப் சிவ்தசானி, பரேஷ் ராவல், ப்ரீத்தி ஜாங்கியானி, அம்ரிதா அரோரா, ஜானி லீவர் & ராகுல் தேவ்

தன்னை அறியாமல் கும்பல் போர்களில் ஈடுபடுகையில் ஒரு பல் மருத்துவரின் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் சவாரியாக மாறுகிறது.

பிரதர்ஸ் (Brothers) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: அக்‌ஷய் குமார் & சித்தார்த் மல்ஹோத்ரா

கலப்புத் தற்காப்புக் கலைப் போட்டியில் தெருச் சண்டைப் போடும் இரண்டுப் பிரிந்தச் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிர்கொள்கின்றனர்.

குருதி மழை (இறுதி அத்தியாயம் – 22)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சி.குமரேசன், திலீப் குமார் & ஆமு திருஞானம்

எழில் பதவி உயர்வுப் பெறுகிறார்.

வெள்ளி, 1 ஜனவரி

தெறிக்க விடலாமா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

கலைஞர்கள்: யோகி பி, ரேபிட் மேக், எம்ஸி ஜேஸ், ஹேவோக் பிரதர்ஸ், சந்தேஷ் & சித்தார்த்

புகழ்பெற்ற உள்ளூர் கலைஞர்களின் அற்புதமான படைப்புகள் இடம்பெறும் மூன்று மணிநேர உள்ளூர் புத்தாண்டு இசை நிகழ்ச்சி.

அவ்வை சண்முகி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), மாலை 6 மணி

நடிகர்கள்: கமல் ஹாசன், மீனா, ஜெமினி கணேசன் & மணிவண்ணன்

பெற்றோரின் உரிமைகள் குறைவாக உள்ள விவாகரத்துப் பெற்றப் பாண்டியன், தனது மகளைத் தனது முன்னாள் மனைவியிடமிருந்துக் கடத்த முயற்சிக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டப் பிறகு, அவளுடன் நேரத்தைச் செலவிட அவர் ஒரு பணிப்பெண்ணாக மாறுவேடம் போடுகிறார்.

பாபநாசம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: கமல் ஹாசன், கௌதமி & ஆஷா ஷரத்

பள்ளிப் படிப்பை முழுமையாகப் பெறாத சுயம்புலிங்கம், திரைப்படங்களைப் பார்த்துத் தனது அறிவை வளர்த்துக் கொண்ட ஒரு புத்திசாலி. ஒரு தீய சம்பவம் அவரது குடும்பத்தை அழிக்க நேரிடுகையில், தனது குடும்பத்தைப் பாதுகாக்க அனைத்து யுத்திகளையும் பயன்படுத்துகிறார்.

தட்றோம் தூக்றோம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: தேஜீந்தன் அருணாசலம், சக்திவேல் கல்கோனா & சுரேஷ் ஏழுமலை

பணக்காரராக விரும்பும் மூன்று புத்திசாலித்தனமான பெற்றோர்கள் அற்ற சிறுவர்கள் சக்திவாய்ந்த மற்றும் புத்திசாலியான அரசியல்வாதியால் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

பாம்பை டாக்கீஸ் (Premiere) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ராணி முகர்ஜி, ரன்தீப் ஹூடா, சகிப் சலீம், நவாசுதீன் சித்திக், சதாசிவ் அம்ரபுர்கர், நமன் ஜெயின், ரன்வீர் ஷோரே, அமிதாப் பச்சன் & கத்ரீனா கைஃப்.

படத்தின் ஆற்றலைக் காட்டும் நோக்கில் இந்தி சினிமாவின் நூறு ஆண்டுகள் நான்கு சிறுகதைகளில் கொண்டாடப்படுகின்றன.

சனி, 2 ஜனவரி

அன்பே சிவம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), பிற்பகல் 12 மணி | |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: கமல் ஹாசன், ஆர். மாதவன், கிரண் ரத்தோட் & உமா ரியாஸ் கான்

விளம்பரத் தயாரிப்பாளரான அன்பரசு, புவனேஷ்வருக்கு ஒரு வணிகப் பயணத்தை மேற்க்கொள்கிறார். அங்கு பலத்த மழை காரணமாக விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கிறார். சக பயணியான நல்லச்சிவத்தை சந்தித்து அவருடன் நட்பு கொள்ளும்போது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.

உன்னைப்போல் ஒருவன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), மாலை 6 மணி | |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: கமல் ஹாசன், நீராஜ் பாண்டே & மோகன் லால்

ஒரு இரயிலில் வெடிகுண்டை வைத்து அப்பாவி மக்களைக் கொன்ற பயங்கரவாதிகளைப் பழிவாங்குவதற்கானத் தனது நோக்கத்தை அடைய ஒரு சாதாரண மனிதர் பயங்கரவாதத்தின் சக்தியைப் பயன்படுத்துகிறார்.

பிறவி சித்தம் (புதிய அத்தியாயம் – 4)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201), இரவு 9 மணி மணி | |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்:அருசெல்வன் செல்வசாமி

இந்து மதத்தின் விசித்திரமான மற்றும் ஆன்மீக அம்சங்களைக் கொண்ட, குறிப்பாக உள்ளூர் சித்தர்களைச் சித்தரிக்கும் புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படம். பாரம்பரிய மருத்துவத்தின் நன்மைகள், யோகாசனம், சுவாசப் பயிற்சிகள், சைவ உணவு முறைகள் மற்றும் அதன் நன்மைகள், மற்றும் ‘ஜீவ சமாதி’ அல்லது ‘முக்தி நிலையைக்’ கொண்ட எட்டுத் தளங்கள் ஆகியவை இவ்வாவணப்படத்தில் இடம்பெறும்.

அவை யாதெனில், பேராக்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகநாதர் சிவாலய ஆசிரமம் மற்றும் காசிவாசி கண்டைய சுவாமி சமாதி; பினாங்கில் அமைந்துள்ள சித்தர் பழனிசாமி தியான மையம், பிரம்ம ஸ்ரீ சுவாமி சரஹன பவனந்த சமாதி, ஸ்ரீ ரங்கநாத சுவாமி மதாலயம் மற்றும் காந்தசாமி கோயில்; மற்றும் கெடாவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவபித்து குருமாதா (அம்மா) மற்றும் சுவாமி சந்தனந்த சித்தர்.

ஞாயிறு, 3 ஜனவரி

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), மதியம் 3 மணி | |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: கமல் ஹாசன், சினேகா, பிரபு & பிரகாஷ் ராஜ்

ராஜராமன் எனும் ஒரு குண்டர் தனது தந்தையின் கனவை நிறைவேற்ற மருத்துவக் கல்லூரியில் சேருகிறார். அவர் கல்லூரி விதிகளை மீறி பிரச்சினைகளை உருவாக்குகிறார்.

சமையல் சிங்காரி (புதிய அத்தியாயம் – 8)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

சமையல்காரர்: சாந்தி ராஜ்
தொகுப்பாளர்: விக்கி ராவ்

உள்ளூர் சமையல்காரர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர்.

இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்துபோகக்கூடிய பொருட்களிலிருந்து அழகுக் குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.

திங்கள், 4 ஜனவரி

சீரியல் பேய் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ‘புன்னகைப் பூ’ கீதா, ஜேம்ஸ் தேவன், சசி குமார், கவிமாறன், ரேவதி, நவீஷா, அக்ஷ்ரா நாயர், கோகுலன், சுரேஷ் & ராஜ் கணேஷ்

வானொலி அறிவிப்பாளரான கீதா, அவரது இரசிகர்கள் பகிரும் அமானுஷ்ய கதைகளை மையமாகக் கொண்ட ஒரு திகில் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். ஒரு நாள், கீதா தனது நேயர்களிடமிருந்து பேய் வீட்டில் தங்குவதற்கானச் சவாலை ஏற்றுக்கொண்டார். அவரது அனுபவம் ஓர் இணைய நிகழ்ச்சியின் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சி உலகளவில் மில்லியன் கணக்கான இரசிகர்களால் பார்க்கப்பட்டு மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. கீதாவின் பணியில் இது ஒரு மிகப் பெரிய வெற்றியாக இருந்தபோதிலும், கீதா தனது சகோதரி மற்றும் மைத்துனர் இருவரையும் ஒரு பயங்கரமான கார் விபத்தில் இழந்ததால் மகிழ்ச்சியடையவில்லை.

கீதா பேய் வீட்டில் தங்கிய போது அங்குள்ள ஒரு தனித்துவமானப் பெட்டியைத் திறந்ததால் அதிலிருந்துத் தப்பித்த துர்தேவதை அவ்விபத்தினை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில், கீதா அனைத்து துர்தேவதைகளையும் மீண்டும் அப்பெட்டியில் அடைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

16 வயதினிலே (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: கமல் ஹாசன், ஸ்ரீ தேவி & ரஜினி காந்த்

பதினாறு வயதான மயில், நகரத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரைக் காதலிக்கிறாள். அவரது தேவைகளுக்கு இணங்காததால் அம்மருத்துவர் மயிலை விட்டு பிரிகிறார். அப்போது, சப்பாணி அவள் மீது அக்கறை எடுத்துக் கொள்கிறார்.

யார்? (புதிய அத்தியாயங்கள் – 23-27)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

அதிர்ச்சியூட்டும் வகையில், அழகு ராணிப் போட்டியின் ஒரு மாடல் இறந்துக் கிடக்கிறார். விசாரணைக்கு உதவக்கூடிய சில மதிப்புமிக்க தகவல்களை திவ்யா நினைவுக் கூர்ந்தார்.

மூன்றாவது கண் (புதிய அத்தியாயங்கள் – 14-18)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

உண்மை வெகு தொலைவில் இல்லை. ராணா தனது யுத்தியைப் பயன்படுத்துவார். ராணாவின் வாழ்க்கையில் இன்னொரு பெண் இருப்பதை ரூபா உணர்வாரா?

செவ்வாய், 4 ஜனவரி

மூன்றாம் பிறை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: கமல் ஹாசன், ஸ்ரீ தேவி & சில்க் ஸ்மிதா

கார் விபத்து காரணமாக தலைமூன்றாம் பிறை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)யில் பலத்தக் காயம் ஏற்பட்ட ஒரு இளம் பெண் ஒரு விபச்சார விடுதியில் சிக்கிக் கொள்ளவே அவள்பால் காதல் வயப்படும் ஒரு பள்ளி ஆசிரியர் அவளை மீட்கிறார்.

வியாழன், 7 ஜனவரி

அவுட் ஆப் டைம் (Out of Time) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: டாம் ஆல்டர், டேனி சூரா & சஹில் புல்

தனது தந்தை மர்மமான முறையில் காணாமல் போனதால் குழப்பமடைந்த ஒரு இளைஞன், தனது நண்பர்களுடன் ஒரு பிரிட்டிஷ் சகாப்த மாளிகைக்குச் செல்கிறான். அங்கு அவன் கடந்தக் காலத்திலிருந்து வியக்க வைக்கும் உண்மைகளைக் கண்டறிய முயற்சிக்கும் போது ஒருபோதும் முடிவடையாத நேர சுழற்சியில் மாட்டிக்கொள்கிறான்.

வெள்ளி, 8 ஜனவரி

தீவிரம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: அம்சாத் கான், அர்ஜுன் சிதம்பரம் & கோகுல் ஆனந்த்
அம்சாத் கான் மற்றும் கோகுல் ஆனந்த் இருவரையும் முக்கிய கதாபாத்திரங்களில் கொண்ட மைக்கேல் முத்து இயக்கிய நாடகத் திரைப்படம்.

தூங்கா வனம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: கமல் ஹாசன், மது ஷாலினி, ராஜேஷ் எம். செல்வா & ஆஷா ஷரத்

குற்றப் பாதாள உலகத்துடன் தொடர்புடைய ஒரு காவல்துறையினரும், அவரது சக நண்பரும் ஒரு சக்திவாய்ந்த போதைப்பொருள் வியாபாரியிடமிருந்துக் கொக்கேன் (cocaine) எனும் போதைப்பொருளைத் திருடும்போது பிடிபடுகையில் அவரது இரகசிய வாழ்க்கை அம்பலமாகிறது. மேலும், அச்செயல் அவரது மகனின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

சனி, 9 ஜனவரி

இசாத் கி ரொட்டி (Izzat Ki Roti) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: சன்னி தியோல், ரிஷி கபூர், ஜூஹி சாவ்லா & ஃபர்ஹா நாஸ்
லக்ஷ்மி தனது இரண்டு மகன்களான கிருஷ்ணா மற்றும் ஜீத் ஆகியோருடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். பொறாமைக் கொண்ட வீரேந்திர பிரதாப் அவரது தொழிலைப் பறிக்க விரும்புகிறார். மேலும், இரு சகோதரர்களிடையேப் பிளவு ஏற்படுகிறார்.

பிறவி சித்தம் (புதிய அத்தியாயம் – 5)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201), இரவு 9 மணி மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தொகுப்பாளர்:அருசெல்வன் செல்வசாமி

இந்து மதத்தின் விசித்திரமான மற்றும் ஆன்மீக அம்சங்களைக் கொண்ட, குறிப்பாக உள்ளூர் சித்தர்களைச் சித்தரிக்கும் புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படம். பாரம்பரிய மருத்துவத்தின் நன்மைகள், யோகாசனம், சுவாசப் பயிற்சிகள், சைவ உணவு முறைகள் மற்றும் அதன் நன்மைகள், மற்றும் ‘ஜீவ சமாதி’ அல்லது ‘முக்தி நிலையைக்’ கொண்ட எட்டுத் தளங்கள் ஆகியவை இந்த ஆவணப்படத்தில் இடம்பெறும்.

அவை யாதெனில், பேராக்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகநாதர் சிவாலய ஆசிரமம் மற்றும் காசிவாசி கண்டைய சுவாமி சமாதி; பினாங்கில் அமைந்துள்ள சித்தர் பழனிசாமி தியான மையம், பிரம்ம ஸ்ரீ சுவாமி சரஹன பவனந்த சமாதி, ஸ்ரீ ரங்கநாத சுவாமி மடாலயம் மற்றும் கந்தசாமி கோயில்; மற்றும் கெடாவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவபித்து குருமாதா (அம்மா) மற்றும் சுவாமி சந்தனந்த சித்தர்.

ஞாயிறு, 10 ஜனவரி

மும்பை எக்ஸ்பிரஸ் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), இரவு 9 மணி | |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: கமல் ஹாசன், ராணி முகர்ஜி & வசுந்திர தாஸ்

ஒரு மோட்டார் சவாரி மற்றும் மூன்று வஞ்சகர்களும் ஒரு பணக்காரனின் மகனைக் கடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு காவல்துறை அதிகாரியின் மகனைத் தவறாகக் கடத்தியதை விரைவில் கண்டுப் பிடிக்கின்றனர்.

சமையல் சிங்காரி (புதிய அத்தியாயம் – 9)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

சமையல்காரர்: சாந்தி ராஜ்
தொகுப்பாளர்: விக்கி ராவ்

உள்ளூர் சமையல்காரர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம். விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர். இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டும்மல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.

அதே நேரத்தில் அழிந்துபோகக்கூடிய பொருட்களிலிருந்து அழகு குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை