Home One Line P2 ஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை – பக்தி நிகழ்ச்சிகளின் முதல் ஒளிபரப்புகள்

ஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை – பக்தி நிகழ்ச்சிகளின் முதல் ஒளிபரப்புகள்

544
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை ஒளிபரப்புகள் இடம் பெறவிருப்பதோடு, பல பக்தி நிகழ்ச்சிகளின் முதல் ஒளிபரப்புகளும் ஒளியேறவிருக்கின்றன.

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்து தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தைப்பூச நேரலை ஒளிபரப்புகளையும் மற்றும் முதல் ஒளிபரப்புப் பக்தி நிகழ்ச்சிகளையும் ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231) மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றில் கண்டு மகிழலாம். அனைத்து மலேசியர்களும் மின்னியல் தளமான, ஆஸ்ட்ரோ உலகம் வழியாக தைப்பூச நேரலை ஒளிபரப்புகளை பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.

பினாங்கில் அமைந்திருக்கும் தண்ணீர்மலை ஆலயம், ஈப்போவில் அமைந்திருக்கும் கல்லுமலை ஆலயம், இந்தியாவில் அமைந்துள்ள பழனி மற்றும் திருத்தணி ஆலயங்கள், இலங்கை மற்றும் மொரீஷியசில் அமைந்துள்ள முருகன் ஆலயங்கள், ஆகிய உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆலயங்களில் இடம்பொறும் தைப்பூசச் சிறப்பு பூஜைகளின் நேரலை ஒளிபரப்புகளை ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231) மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். அனைத்து மலேசியர்களும் மேற்குறிப்பிட்ட ஆலயங்களிலிருந்து தைப்பூச நேரலை ஒளிபரப்புகளை ஆஸ்ட்ரோ உலகம் வழியாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.

#TamilSchoolmychoice

மேலும், வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) மற்றும் விண்மீன் எச்டி (அலைவரிசை 231) ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் பக்தி நிகழ்ச்சிகளைக் கண்டு இரசிக்கலாம். அவை பின்வருமாறு :

• புராணக் கதைகள், ஆலயங்கள் சார்ந்த ஆவணப்படங்கள், உள்ளூர் கலைஞர்கள் பாடி அசத்தியப் பக்திப் பாடல்கள், ‘மயிலாட்டம்’ உள்ளிட்ட பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் மற்றும் ‘உறுமி மேளம்’ படைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நதியா ஜெயபாலன் தொகுத்து வழங்கும் கதிர்வேல் காக்க நேரலை, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள்;


• பிரபல உள்ளூர் திரைப்பட இயக்குநர், சந்தோஷ் கேசவன் கைவண்ணத்தில் மலர்ந்த, பக்தி டெலிமூவியான, “அமுவன்”. இதில் மோகன் ராஜ், பாஷினி சிவகுமார் மற்றும் தாஷ்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

ராகா வானொலியிலும் சிறப்பு நிகழ்ச்சிகள்

வானொலி வழியாகவும் மலேசியர்கள் 24 மணி நேரப் பக்திப் பாடல்களை ராகா வானொலி அல்லது SYOK செயலி வழியாகக் கேட்டு மகிழலாம். அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் பலவிதமானப் பக்திக் கட்டுரைகளையும் மலேசியர்கள் வாசித்துப் பயன் பெறலாம்.

மேல் விவரங்களுக்கு ஆஸ்ட்ரோவின் சமூக வலைத்தளங்களை வலம் வாருங்கள்:

முகநூல் | இன்ஸ்டாகிராம்