கோலாலம்பூர்: கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஒத்த மற்றொரு முழு அடைப்பு தேவை மற்றும் தாக்கம் குறித்து அரசாங்கம் விவாதிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 2.0 பிப்ரவரி 4- ஆம் தேதியுடன் முடிவடைவதற்கு முன்னர், தாம் அல்லது சுகாதார இயக்குநர் இந்த விவகாரம் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிடுவார் என்று அவர் கூறினார்.
அதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்கள் இது குறித்து விவாதிக்கும் என்றார். இந்த முடிவு சுகாதாரம் மற்றும் பொருளாதாரத் துறைகள் இரண்டையும் பரிசீலிக்கும் என்று இஸ்மாயில் மேலும் கூறினார்.