கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் ஒரு பெரிய இணையத் தாக்குதல் நடக்க உள்ளதாக அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற எந்தவொரு தாக்குதலையும் தடுக்கவும் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் அது கடிதம் அனுப்பியுள்ளது.
‘அநாமதேய மலேசியா’ என்று அழைக்கப்படும் குழு அரசாங்க வலைத்தளங்கள் மற்றும் # OpsWakeUp21 எனப்படும் இயங்கலை தளங்களில் தாக்குதலைத் தொடங்குவதாக உறுதியளித்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த குழு சமீபத்தில் தனது திட்டத்தின் ஒரு காணொலியை வெளியிட்டது. இது தரவு மீறல்கள் மற்றும் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அரசாங்கத்திற்கு ஓர் அழைப்பு என்று கூறப்படுகிறது.
இந்த அச்சுறுத்தலை தீவிரமாக கருதுவதாகவும், தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனம் மூலம், தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல் துறையுடன் தேசிய பாதுகாப்பு மன்றம் இணைந்து செயல்படுவதாக கூறியுள்ளது.