Home நாடு நாடு முழுவதும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலாக்கப்படலாம்

நாடு முழுவதும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலாக்கப்படலாம்

621
0
SHARE
Ad

புத்ரா : நாளை வெள்ளிக்கிழமை (20 மே 2021) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவிருக்கும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தில், நாடு முழுவதிலும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படலாம்.

எதிர்பாராத திருப்பமாக மாநில அரசாங்கங்களைப் பிரதிநிதித்து மந்திரி பெசார்களும், முதலமைச்சர்களும் இந்த தேசியப் பாதுகாப்பு மன்றத்தில் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

தினமும் பெருகி வரும் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கையினால் நாடு முழுமையிலுமான முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலாக்கப்படுவது குறித்த முடிவு நாளைய தேசியப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.