Home No FB செல்லியல் காணொலி: ஆஸ்ட்ரோ “பிறவி சித்தம்” – டத்தோ நடராஜன் திருத்தம் சுட்டிக் காட்டுகிறார்

செல்லியல் காணொலி: ஆஸ்ட்ரோ “பிறவி சித்தம்” – டத்தோ நடராஜன் திருத்தம் சுட்டிக் காட்டுகிறார்

1161
0
SHARE
Ad

Selliyal video | Datuk Nadarajan corrects information on Bujang Valley aired on ASTRO “Piravi Sitham” program | 03 February 2021
செல்லியல் காணொலி | ஆஸ்ட்ரோ “பிறவி சித்தம்” நிகழ்ச்சி குறித்து டத்தோ நடராஜனின் திருத்தம் | 03 பிப்ரவரி 2021

கடந்த சில வாரங்களாக ஆஸ்ட்ரோ வானவில் எச்.டி (அலைவரிசை எண் 201) அலைவரிசையில் ஒளியேறிக் கொண்டிருக்கும் “பிறவி சித்தம்” என்ற தொலைக்காட்சித் தொடர் மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடந்த சனிக்கிழமை (ஜனவரி 30) ஒளியேறிய “பிறவி சித்தம்” நிகழ்ச்சியில் கெடாவில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்கு பற்றிய சில தகவல்கள் பகிரப்பட்டன.

#TamilSchoolmychoice

சோழர்கள் கடாரம் மீது படையெடுத்து வந்தது, கடாரத்தில் உள்ள இந்துக் கோவில்கள் குறித்து விவரிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் தவறான தகவல் ஒன்று இடம் பெற்றுள்ளதாக சுட்டிக் காட்டுகிறார் டத்தோ வி.நடராஜன்.

பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து வருபவர் நடராஜன். “சோழன் வென்ற கடாரம் – பூஜாங் பள்ளத்தாக்கு” என்ற தமிழ் நூலையும், “Bujang Valley the wonder that was Ancient Kedah” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டவர்.

பிறவி சித்தம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற தவறான தகவல் என்ன என்பதை டத்தோ நடராஜன் விவரிக்கும் காணொலியை மேற்காணும் செல்லியல் யூடியூப் இணைப்பில் காணலாம்.