Home One Line P1 கொவிட்-19: அம்பாங் அம்னோ தலைவர் காலமானார்

கொவிட்-19: அம்பாங் அம்னோ தலைவர் காலமானார்

513
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று மதியம் 12.30 மணியளவில் சுங்கை புலோ மருத்துவமனையில் அம்பாங் அம்னோ தலைவர் இஸ்மாயில் கிஜோ காலமானார்.

முன்னாள் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான அவரின் மரணம் குறித்து, சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமார் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“எனது நண்பர், டத்தோ இஸ்மாயில் கிஜோ சுங்கை புலோ மருத்துவமனையில் காலமானார் என்பதை நினைத்து வருந்துகிறேன். அவரது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இரங்கல்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

1994 முதல் 2013 வரை இஸ்மாயில் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

இஸ்மாயிலுக்கு கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்குகளை சுகாதார மலேசியா அமைச்சகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.