Home One Line P2 ஔவையார், பாரதியார் வரிகளை மேற்கோள்காட்டி பேசிய மோடி

ஔவையார், பாரதியார் வரிகளை மேற்கோள்காட்டி பேசிய மோடி

534
0
SHARE
Ad

சென்னை: நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14) தமிழகம் வந்த இந்திய பிரதமர் மோடி தமிழல் பேசி மீண்டும் சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றார்.

வழக்கமாகத் திருக்குறளை மேற்கோள் காட்டும் மோடி நேற்று ஔவையார் மற்றும் பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

நேற்று, சென்னைக்கு மெட்ரோ இரயில் திட்டத்தைத் தொடங்கி வைத்த மோடிக்கு, அதிக அளவில் தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

#TamilSchoolmychoice

ஒரு கட்டத்தில் தனது உரையில் உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் மொழிதான் என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார் மோடி. தொடர்ந்து அவரது உரையில் ஔவையாரின் கீழ்க்காணும் வரிகளை அவர் மேற்கோள் காட்டினார்.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்-

என்கிற வரிகளை மோடி குறிப்பிட்டுப் பேசினார்.

விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எங்கு மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும்.

மேலும், பாரதியின் கவிதையான

ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்
குடைகள் செய்வோம்; உழுபடைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம்; இரும்பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

என்கிற வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்.