Home One Line P1 சாலைத் தடுப்புகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான கூற்றுக்களை விசாரிக்கவும்

சாலைத் தடுப்புகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான கூற்றுக்களை விசாரிக்கவும்

439
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண், சாலைத் தடுப்பின் போது, கடமையில் இருந்த தங்கள் அமலாக்க அதிகாரிகளின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு காவல் துறையை வலியுறுத்தியுள்ளார்.

கூறப்படும் சம்பவங்கள் குறித்த அறிக்கைகளை தாம் தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும், குறிப்பாக அவை அமலாக்கப் பணியாளர்களை உள்ளடக்கியிருப்பதால் அவற்றை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் ரினா கூறினார்.

உடனடி விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

#TamilSchoolmychoice

“இந்த பிரச்சனையை கையாள்வதில், அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் மதிக்க வேண்டும் என்றும், நாட்டில் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் தியாகங்களை செய்துள்ள காவல் துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தக்கூடாது என்றும் நான் நம்புகிறேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஒருவர் செய்த குற்றத்திற்கு முழு துறையையும் குறைக் கூறுவது சரியில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் தனித்தனி சம்பவங்களில் சாலைத் தடுப்புகளில் பெண் ஓட்டுநர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் இரண்டு காவல் துறை அதிகாரிகளை புக்கிட் அமான் இடைநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தனது அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாக ரினா மீண்டும் வலியுறுத்தினார்.