Home One Line P1 கொவிட்-19 தடுப்பூசி: முதல் கட்டத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும்

கொவிட்-19 தடுப்பூசி: முதல் கட்டத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும்

534
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பராமரிப்பு அல்லது முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு இது வழங்கப்பட வேண்டும் என்று அது கூறியுள்ளது.

முதியோர் பராமரிப்பு இல்லங்கள் சம்பந்தப்பட்ட புதிய தொற்றுக் குழுக்களை அண்மையில் கண்டறிந்ததன் காரணமாக இது நடத்தப்பட வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி கூறியது.

65 வயதிற்கு மேற்பட்ட 2.3 மில்லியன் மலேசியர்களில் 30,000 முதல் 40,000 பேர் 1,500 பராமரிப்பு இல்லங்களில் வசித்து வருகின்றனர் என்று அது கூறியது.

#TamilSchoolmychoice

முதியவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும். மேலும், இறப்பு விகிதத்தையும், மருத்துவ முன்னணியில் இருப்பவர்களின் சுமையையும் குறைக்கக்கூடும் என்றும் இக்குழு கூறியது.