Home One Line P1 நெகிரி செம்பிலான், சரவாக் உயர்ந்த தொற்று வீதத்தைக் கொண்டுள்ளன

நெகிரி செம்பிலான், சரவாக் உயர்ந்த தொற்று வீதத்தைக் கொண்டுள்ளன

428
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேகிரி செம்பிலான் மற்றும் சரவாக் மிக உயர்ந்த தினசரி கொவிட்-19 நோய்த்தொற்று வீதத்தை (Rt) கொண்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி முறையே 1.06 ஆக இது பதிவு செய்துள்ளதாக சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

தனது டுவிட்டர் கணக்கின் மூலம் பகிரப்பட்ட விளக்கப்படத்தின் அடிப்படையில், பினாங்கு இரண்டாவது மிக உயர்ந்த நோய்த்தொற்று வீதத்தை, 0.99- ஆகவும், கிளந்தான் மற்றும் மலாக்கா (0.96), சிலாங்கூர், பேராக் மற்றும் கெடாவில் 0.93 ஆகவும் பதிவாகி உள்ளது.

பிற மாநிலங்கள் 0.90 க்குக் கீழ் வாசிப்புகளைப் பதிவு செய்தன. அதாவது திரெங்கானு (0.89), ஜோகூர் (0.87), கோலாலம்பூர் (0.81), புத்ராஜெயா மற்றும் பெர்லிஸ் (0.76), பகாங் (0.73) மற்றும் லாபுவான் ஆகியவை 0.51- ஐப் பதிவு செய்தன.

#TamilSchoolmychoice

முழு நாட்டிற்கும் நோய்த்தொற்று வீதம் 0.91 ஆகும்.

நேற்று நாடு முழுவதும் மொத்தம் 2,998 புதிய கொவிட் -19 சம்பவங்கள் மற்றும் 22 இறப்புகள் பதிவாகியுள்ளன.