கோலாலம்பூர்: துணை தேடும் கைபேசி செயலியின் (சுகர் புக்) நிறுவனர் என நம்பப்படும் ஒருவரை காவல் துறையினர் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 17) கைது செய்தனர்.
சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் பாட்ஸில் அகமட், 34 வயதான அந்நபர் கோலாலம்பூரில் உள்ள மோன்ட் கியாராவில் மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தேக நபர் சுகர் புக் செயலியின் நிறுவனர் என்று கூறினார்,” என்று பாட்ஸில் கூறினார்.
ஷா ஆலம் கீழ்நிலை நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப் போர காவல் துறையினர் இன்று விண்ணப்பிக்கவுள்ளனர்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (பி) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998- இன் பிரிவு 233, கீழும் விசாரிக்கபப்டுகிறது.