Home 13வது பொதுத் தேர்தல் புக்கிட் செலம்பாவில் மணிக்குமாருக்கு வாய்ப்பில்லை; கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு

புக்கிட் செலம்பாவில் மணிக்குமாருக்கு வாய்ப்பில்லை; கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு

629
0
SHARE
Ad

Manikumar-Bk-Selambauஅலோர் ஸ்டார்,ஏப்ரல் 21- புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ எஸ்.மணிக்குமாருக்கு மீண்டும் இப்பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதிலாக டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக  புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் அயராது சேவையாற்றி வரும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுவார் என்று டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தார்.

கெடா மாநிலத்தில் பல  மருத்துவ மையங்களைத் திறந்து ஏழை, எளியோர்க்கு சேவைகளை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

புக்கிட் செலாம்பாவ் தொகுதியில் ம.இ.கா – தேசிய முன்னணி சார்பாக மாறன் முத்தையா போட்டியிடுகின்றார்.

26.2 சதவீதம் இந்திய வாக்காளர்களைக் கொண்ட புக்கிட் செலாம்பாவ் தொகுதியில் 53.4 சதவீத மலாய் வாக்காளர்களும் 19.8 சதவீத சீன வாக்காளர்களும் இருக்கின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் இந்த தொகுதியில் பிகேஆர் சார்பாக வென்ற வி.ஆறுமுகம் சில மாதங்களுக்குப் பிறகு சொந்த காரணங்களுக்காக  ராஜினாமா செய்தார்.

அதன் காரணமாக நடைபெற்ற இடைத் தேர்தலில் பிகேஆர் சார்பில்  போட்டியிட்ட மணிக்குமார் வெற்றி பெற்றார்.

இருப்பினும் இந்த முறை அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.