Home 13வது பொதுத் தேர்தல் ராமன் ஆண்டாலும், ராவணைன் ஆண்டாலும் ஒன்றுதான் என்ற வேதமூர்த்தியின் வேதவாக்கு அதிர்ச்சியை அளிக்கிறது-அம்பிகா

ராமன் ஆண்டாலும், ராவணைன் ஆண்டாலும் ஒன்றுதான் என்ற வேதமூர்த்தியின் வேதவாக்கு அதிர்ச்சியை அளிக்கிறது-அம்பிகா

700
0
SHARE
Ad

Ambiga-Featureகோலாலம்பூர், எப்ரல் 21 –  ஹிண்ட்ராஃபின் அழைப்பை ஏற்று, அதில் பொதிந்திருந்த நியாயத்தை உணர்ந்து, நாடெங்கிலுமிருந்து  2007ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஒரு காலைப் பொழுதில் அந்த ஆட்சேப-உரிமைப்போராட்டத்தில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கில் இந்தியர்கள் நிமிர்ந்த நெஞ்சுடன், கோலாலம்பூரின் வீதிகளில் திரண்டு வந்து கலந்துகொண்டனர்.

#TamilSchoolmychoice

அவர்களை தடியடிகளோ, ரசாயன நீர் கலந்த வீச்சுகளோ அல்லது கண்ணீர் குண்டுகளோ கொண்டு அதிகாரவர்க்கம் பணியவைக்க முடியவில்லை.

அரசின் அடக்குமுறை 2008 தேர்தலில் எதிரொலித்தது. ஒன்றுபட்ட ஹிண்ட்ராஃபின் 5 தலைவர்களின் சிறைவாசத்தால் இந்தியர்கள் தங்கள் வாக்குகளை எதிர்கட்சிக்கு ஆதரவாக பதிவுசெய்தனர்.

அதன் பின்னர் நடந்த சம்பவங்களும், ஹிண்ட்ராப் தலைவர்கள் அனுபவித்த சிறைவாசமும் ஹிண்ட்ராப் மீதும் அதன் தலைவர்கள் மீதும்இந்திய சமுதாயத்திற்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஆனால் ஹிண்ட்ராஃபின் மீதுள்ள நம்பிக்கை தொடரும்படி அதன் தலைவர்கள் நடந்துகொள்ளவில்லை. அவர்களுக்குள் ஏற்பட்ட பூசல் ஆளுக்கொரு பக்கமாக அவர்களை செல்லவைத்தது.

ஆறு வருடங்களுக்குப்பின் அந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்து இப்போது தன்னை அவ்வியக்கத்தின் தலைவராகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டவர் வேதமூர்த்தி.

முன்பு அனைத்துலக அரங்கில் ஹிண்ட்ராஃபை ஆதரித்தும் தேசிய முன்னணியைக் கடுமையாக விமர்சித்தும் வந்தவர், இப்போது, அதற்கு நேர்மாறாக தேசியமுன்னணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

தேசியமுன்னணியுடன் ஏதோ ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்ட அவர் அனைவரையும் நஜிக்கின் தலைமைத்துவத்திற்கு வாக்களிக்கச் சொல்லி  நாடளவில் மக்களின் வெறுப்பையும், ஆத்திரத்தையும் சம்பாதித்துள்ளார்.

இதன் பின்னணியில் வேதமூர்த்தி குழுவினருக்கு தேசிய முன்னணியிடமிருந்து சில சலுகைகள் கைமாறியிருக்கக் கூடும் என்று எதிர்ப்பாளர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,

வேதமூர்த்தி தரப்பு ஹிண்ட்ராஃபின் நிபந்தனைகளை மக்கள் கூட்டணி புறக்கணித்துள்ள வேளையில், தேசியமுன்னணி அதை ஏற்றுக்கொண்டு, இந்தியர்களுக்குக் கைகொடுக்க முன்வந்ததாலேயே இந்த முடிவு என்று மக்களின் காதில் வேதமூர்த்தி பூ சுற்றியுள்ளார்.

இதற்கிடையில் நஜிப்புடன் ஒப்பந்தம் கையெழுத்திட்ட பிறகு ராமன் ஆண்டால் என்ன, ராவணைன் ஆண்டால் என்ன  எல்லாம் ஒன்றுதான் என்று வேதமூர்த்தியின் அறிவிப்பால்  மக்களிடையே ஆத்திரமும், குழப்பமுமே மிஞ்சியுள்ளது.

வேதமூர்த்தியின் பதிலால்அம்பிகா அதிர்ச்சி

இதுபற்றி பெர்சே இணைத்தலைவரும், மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசனிடம் பிரி மலேசியா டுடே இணையத் தள செய்திப் பத்திரிக்கையின் சார்பாக கருத்து கேட்ட போது அரசியல் ரீதியாக முடிவெடுக்க ஹிண்ட்ராஃபிற்கு முழுத்தகுதியும் உள்ளதாகவும், ஆனால் இந்தியர்களைப் பொறுத்தவரை  காப்பியத்தில் ராமன் புனிதனாகவும், ராவணன் தீயவனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது தெரிந்தும் ராமன் ஆண்டாலும், ராவணைன் ஆண்டாலும் ஒன்றுதான் என்பது போன்ற வேதமூர்த்தியின் விளக்கம் தமக்கு அதிர்ச்சியளிப்பதாக ஆத்திரத்துடன் அம்பிகா கூறினார்.

இந்த தகவல் மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் சொல்லப்பட்ட தவறான தகவல் என்று தெரிவித்த அம்பிகா, இத்தகவல்  இந்தியர்களுக்கும், ராமனை கடவுளாக வணங்குபவர்களுக்கும், அவர்களை மட்டம் தட்டும் விதத்தில் அவர்களின் நம்பிக்கைகளை கொச்சைப் படுத்தும் விதத்தில் சொல்லப்பட்ட தகவல் என்பதோடு ஆட்சி செய்பவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி  அவர்களை அனுசரித்துப் போகவேண்டும் என்கிறாரா வேதமூர்த்தி என்று தமக்குப் புரியவில்லை என்றும் தனது சந்தேகத்தை தெரியப்படுத்தியிருக்கிறார்.

எல்லாரும் இதே கேள்வியைத்தான் வேதமூர்த்தியிடம் கேட்க நினைக்கிறார்கள்!

பதில் சொல்வாரா வேதமூர்த்தி?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Ambiga incensed over ‘Rama or Ravana’ remark

RK Anand | April 19, 2013

The Bersih co-chairperson sees red over P Waythamoorthy’s remark that it does not matter if Rama or Ravana rules.

http://www.freemalaysiatoday.com/wp-content/uploads/2013/04/Ambiga-Uthayakumar-.jpgKUALA LUMPUR: On that November morning, tens of thousands clogged the major arteries of the nation’s capital. That event would lat