Home One Line P1 இன அடிப்படையிலான பாகுபாடுகள் ஜோகூர் பள்ளிகளில் இருக்கக்கூடாது!

இன அடிப்படையிலான பாகுபாடுகள் ஜோகூர் பள்ளிகளில் இருக்கக்கூடாது!

581
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கான இனம் அடிப்படையில் மாணவர்களைப் பிரிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்று துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் கூறினார்.

மாநிலத்தில் உள்ள பள்ளிகள் ஓர் அடையாளத்தின் கீழ், இனங்களுக்கிடையில் ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்கும் ஜோகூர் மாநிலத்தை உருவாக்குவதிலிருந்து விலகிச் செல்லக்கூடாது என்று அவர் கூறினார்.

டத்தோ பெந்தாரா லுவார் இடைநிலைப்பள்ளி தலைமையாசிரியர் அப்துல் ரசாக் ஹமீட், பத்து பஹாட் மாவட்ட அதிகாரி, இஸ்மாயில் அபு மற்றும் மாநில கல்வி அமைச்சு துணை இயக்குநர் சாஹிலோன் ஆகியோரை சந்தித்த பின்னர் அவர் இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

#TamilSchoolmychoice

“ஜோகூர் மாநிலத்தில் உள்ள எந்தப் பள்ளியிலும் இந்த சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாநில கல்வித் துறையிடம் கூறியுள்ளேன்,” என்று துங்கு இஸ்மாயில் தமது முகநூலில் நேற்று தெரிவித்தார்.

“பொது நலனையும் மக்களின் ஒற்றுமையையும் பேணுவதற்கு இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை, அப்துல் ரசாக், மாணவர்களின் பாடத்திட்ட நடவடிக்கைகளை அவர்களின் இனத்தின் அடிப்படையில் பதிவு செய்யும் பள்ளியின் நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.