Home One Line P1 கொவிட்-19: சிலாங்கூரில் 19 பள்ளிகள் மூட உத்தரவு!

கொவிட்-19: சிலாங்கூரில் 19 பள்ளிகள் மூட உத்தரவு!

636
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றை அடுத்து சிலாங்கூரில் மொத்தம் 19 பள்ளிகள் திங்கட்கிழமை தொடங்கி மூட உத்தரவிடப்பட்டன.

திங்களன்று வெளியிடப்பட்ட பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் அறிக்கையின்படி, மூட உத்தரவிடப்பட்ட பள்ளிகள், புக்கிட் ஜெலுதோங் இடைநிலைப்பள்ளி ; பண்டார் ஸ்ரீ டாமான்சாரா 2 இடைநிலைப்பள்ளி; டாமான்சாரா ஜெயா இடைநிலைப்பள்ளி; செக்ஷன் 7 இடைநிலைப்பள்ளி, யு.எஸ்.ஜே 23 இடைநிலைப்பள்ளி

பூச்சோங்கில், பூச்சோங் உத்தாமா 1 இடைநிலைப்பள்ளி; செக்ஸியன் 4 பண்டார் கின்ராரா இடைநிலைப்பள்ளி; பண்டார் புஞ்சாக் ஜாலில் இடைநிலைப்பள்ளி; செக்ஷன் 20 இடைநிலைப்பள்ளி மற்றும் பூச்சோங் பெர்டானா இடைநிலைப்பள்ளி ஆகியவை மூடப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இது தவிர, பெஸ்தாரி சுபாங் இஸ்லாமிய இடைநிலைப்பள்ளி மற்றும் சீனப்பள்ளி ஒன்றும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி மூடல் கிருமிநாசினி பணிகள் மற்றும் நெருங்கிய தொடர்புகளுக்கான பரிசோதனை நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டது என்று பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

“பள்ளி திறக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும். மேலும் நேர்மறையான நிகழ்வுகளுக்கான அனைத்து நெருங்கிய தொடர்புகளும் தனிமைப்படுத்தப்படுவதை பள்ளி உறுதி செய்ய வேண்டும்,” என்று அது கூறியது.