கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் முதன்முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்துவது போன்று நடந்து கொள்வதாக நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்னர் முக்கியமான அம்சங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற மொகிதினின் கூற்று குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் இதனை தெரிவித்தார்.
இருப்பினும், நஜிப்பைப் பொறுத்தவரை, இந்த விஷயம் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல என்று கூறினார்.
“மீண்டும் ஆராய வேண்டிய அவசியம் இல்லை, நான் ஒரு தீர்வு தருகிறேன். முதல் படி: நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கடிதம் அனுப்பவும். இரண்டாவது படி: கூடுவது,” என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் விரைவில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று நஜிப் மீண்டும் வலியுறுத்தினார்.
“கடந்த ஆண்டு கொவிட் -19 சம்பவங்கள் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான சம்பவங்களை எட்டியபோது நாடாளுமன்றம் கூடியது. அந்த நேரத்தில் ஒருவர் கூட தடுப்பூசி பெறவில்லை. இப்போது, அனைத்து நாடாளும்னற உறுப்பினர்களுக்கும் இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.