Home நாடு பூப்பந்து வீராங்கனை கிசோனாவுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஸ்வரன்

பூப்பந்து வீராங்கனை கிசோனாவுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஸ்வரன்

745
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஸ்பெயின் பூப்பந்து போட்டியில் மலேசியா மறக்க முடியாத மற்றொரு வெற்றியை நிறைவு செய்துள்ளது.

உலக பூப்பந்து கூட்டமைப்பு தொடரில் தனது ஆறாவது பட்டத்தை எஸ்.கிசோனா வென்றுள்ளார். நாட்டின் மற்றொரு பூப்பந்து வீராங்கனையான கோ ஜின் வீவை 31 நிமிடங்களில் வென்றார். இது தொடர்பாக மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.விக்னேஸ்வரன் கிசோனாவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“ஸ்பானிஷ் அனைத்துலக சவாலில் உங்கள் முதல் வெற்றியைப் பெற்ற கிசோனா செல்வதுரைக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் மலேசியாவையும் எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்!,” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.