Home உலகம் உலகம் : செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : கமலா ஹாரிஸ் முதல் வெளிநாட்டுப் பயணம்

உலகம் : செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : கமலா ஹாரிஸ் முதல் வெளிநாட்டுப் பயணம்

1037
0
SHARE
Ad

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முதல் வெளிநாட்டுப் பயணம்

இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவின் துணையதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக கமலா ஹாரிஸ் குவாட்டமாலாவுக்கும், மெக்சிகோவுக்கும் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டுள்ளார்.

விண்வெளிக்குச் செல்கிறார் ரிச்சர்ட் பிரான்சன்

பிரிட்டனின் பிரபல தொழிலதிபரும், வெர்ஜின் ஏர்வேய்ஸ் விமான நிறுவனத்தின் தோற்றுநருமான ரிச்சர்ட் பிரான்சன் எதிர்வரும் ஜூலை 11-ஆம் தேதி விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ள வேளையில் அவருக்குப் போட்டியாக அமெரிக்காவின் அமேசோன் நிறுவன உரிமையாளரான ஜெப் பெசோஸ் இந்த மாத இறுதியில் விண்வெளிக்குச் செல்லப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரோ 2020 : டென்மார்க் 2-1 கோல் எண்ணிக்கையில் செக் குடியரசுவைத் தோற்கடித்தது

நேற்று சனிக்கிழமை (ஜூன் 3) அசர்பைஜான் தலைநகர் பாக்குவில் நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் டென்மார்க் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் செக் குடியரசைத் தோற்கடித்து அரை இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியது.

ஈரோ 2020 : உக்ரேனை 4-0 கோல்களில் தோற்கடித்த இங்கிலாந்து

உக்ரேனுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த இங்கிலாந்து கேப்டன் கேன்…
#TamilSchoolmychoice

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) அதிகாலை 3.00 மணிக்கு இத்தாலி தலைநகர் ரோம்மில் நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து, அபாரமாக விளையாடி 4-0 கோல்களில் உக்ரேனைத் தோற்கடித்தது.

தாய்லாந்து புக்கெட் தீவில் சுற்றுப் பயணிகள் முகக் கவரியின்றி நடமாட்டம்

தாய்லாந்தின் புகழ்பெற்ற உல்லாசத் தீவான புக்கெட்டிற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வருகை தரலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அங்கு குவியத் தொடங்கிய சுற்றுப் பயணிகள், முகக் கவரிகள் இன்றி மகிழ்ச்சியுடன் தீவில் சுற்றித் திரிந்து வருகின்றனர்.

 

.