Home கலை உலகம் ஆஸ்ட்ரோவுடன் பொங்கல் கொண்டாட்டம் – பிரபலங்கள், கலைஞர்கள் பகிர்கிறார்கள்

ஆஸ்ட்ரோவுடன் பொங்கல் கொண்டாட்டம் – பிரபலங்கள், கலைஞர்கள் பகிர்கிறார்கள்

885
0
SHARE
Ad

  • ஆஸ்ட்ரோவுடன் பொங்கல் கொண்டாட்டம்
  • ஆஸ்ட்ரோவின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றித் திறமையான உள்ளூர் பிரபலங்களுடன் உரையாடினோம்:


சுப்ரமணியம் வீராசாமி, உள்ளடக்க மேலாளர், ராகா

o ராகாவில் இரசிகர்கள் எதிர்ப்பார்க்கக்கூடும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய விபரங்களைக் கூறுக.

கவிமாறன், யாஷினி, ஜெய், கோகு, சுரேஷ், ரேவதி, உதயா மற்றும் சந்தோஷ் லோகேந்திரன் ஆகியோர் பாடிய, வானொலி, SYOK செயலி, ராகாவின் யூடியூப் அலைவரிசை மற்றும் முகநூல்-இல் கிடைக்கப் பெறும் “நல்ல காலம் பொறந்தாச்சு” எனும் மனதை வருடும் ராகாவின் பிரத்தியேகத் பொங்கல் பாடலை அனைத்து மலேசியர்களும் கேட்டு மகிழலாம். உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கும் ‘பொங்கல்’ சமையல் போட்டியை ராகாவின் சமூக ஊடகங்கள் வழியாக ராகா இரசிகர்கள் கண்டு மகிழலாம். மேல் விபரங்களுக்கு ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

• அகிலா, சுரேஷ், ரேவதி, உதயா & கோகுலன், அறிவிப்பாளர்கள், ராகா

#TamilSchoolmychoice

o உங்களின் இரசிகர்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொள்க.

அஹிலா – ராகா அறிவிப்பாளர்

அகிலா: இறந்தக் காலத்தை நம் பின்னால் விட்டுவிட்டு, வரும் எதிர்காலத்தைத் திறந்த மனதுடன் வரவேற்போம். இந்தத் தை மாதம் நம் அனைவருக்கும் சிறந்த ஆரம்பமாக இருக்கட்டும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

சுரேஷ் – ராகா அறிவிப்பாளர்

சுரேஷ்: இந்தப் பொங்கல் எனக்கு மிகவும் உன்னதமான ஒரு கொண்டாட்டம். ஏனென்றால், என் மகனுடன் கொண்டாடுகிறேன். சக்கரைப் பொங்கல் போல உங்கள் வாழ்க்கை இனிக்கட்டும், எடுத்தக் காரியம் எல்லாம் சிறக்கட்டும், குடும்பத்தில் சந்தோஷம் பூத்துக் குலுங்கட்டும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! பொங்கலோ பொங்கல்…

ராகா வானொலி அறிவிப்பாளர் ரேவதி

ரேவதி: வேதனைகள் மாறும், சோதனைகள் தீரும், வாழ்க்கை வளமாகும். தைப் பிறந்தால் வழிப் பிறக்கும். எல்லோருக்கும் வாழ வழிக் கிட்டும், எல்லோரும் வாழ்க. நம்பிக்கையோடுச் செயல்படுவோம். தை மாதம் உங்கள் கனவை மேம்படுத்தும். தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

உதயா – ராகா வானொலி அறிவிப்பாளர்

உதயா: தமிழர் தம் மரபை மாண்புறச் செய்யும் தைப்பொங்கல். நன்றி, கருணை, காருண்யம், அன்பு, அழகியல் நிறைந்த திருநாள். உள்ளம் களிக்கக் கொண்டாடுவோம். உவகைப் பொங்கப் பண்பாடுவோம். அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

கோகுலன் – ராகா வானொலி அறிவிப்பாளர்

கோகுலன்: இந்த ஆண்டுப் பொங்கல் நம் அனைவருக்கும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நம் வாழ்வில் கடந்து சென்றவையனைத்தும் மீண்டும் வராது என்பதை நினைவில் கொள்வது அவசியம். கோவிட்-19 காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொங்கல் உள்ளிட்டக் கொண்டாட்டங்களின் போதுக் கட்டுப்பாடுகள் இருந்தன.

ஆனால் இவ்வாண்டு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இல்லாமல் கொண்டாட்டங்கள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. எனவே, பொங்கலை நமதுக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். பொங்கலோ பொங்கல்… அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

• சதீஷ் நடராஜன், இயக்குநர், அட்டகாச பொங்கல்

o இந்த நிகழ்ச்சியைப் பற்றி மேலும் பகிரவும்:

ஒரு கலகலப்பான மற்றும் வேடிக்கை நிறைந்த நிகழ்ச்சி, அட்டகாச பொங்கல். இந்தப் பண்டிகையின் உண்மையான அர்த்தம், முக்கியத்துவம், உணவு வகைகள், அலங்காரங்கள் அடங்கிய பொங்கல் சார்ந்த நிகழ்ச்சியை படைக்க விரும்பியதால் இந்த விளையாட்டு நிகழ்ச்சியைத் தயாரிக்க முடிவு செய்தோம்.

இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற அனைத்துப் பிரபலங்களும் வண்ணமயமான இந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர். இது கலாச்சாரக் கூறுகளை வெளிப்படுத்த எங்களுக்கு உதவியது.

மகிழ்ச்சியான வீரர்கள், தொகுப்பாளர் மற்றும் பிரபலங்களுக்கு இடையேயான வேடிக்கையானப் போட்டி மனப்பான்மை ஆகியவை பொங்கலின் போது இரசிகர்களுக்கு நேர்மறையான உணர்வைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம். விளையாட்டு நிகழ்ச்சியில் பல நட்சத்திரங்களுடன் பணியாற்றியது மறக்கமுடியாத தருணம். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கு நன்றிக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

• டவின். ஆர், இயக்குநர், ராம் லீலா லாக்டவுன்

o இந்த டெலிமூவியை இயக்கிய உங்களின் அனுபவம் மற்றும் இரசிகர்களுடன் நீங்கள் பகிர்ந்துக் கொள்ள விரும்பும் இதன் தனித்துவ அம்சங்களைப் பற்றிக் கூறுக.

பெரும்பாலான ஜோடிகள் தங்களை இக்கதையுடன் தொடர்புப்படுத்த முடியும் என்பதால் திரைக்கதை எழுத்தாளர், திலா ஆறுமுகம் என்னிடம் இக்கதையை கூறியப் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே, அதை டெலிமூவியாக உருவாக்க முடிவு செய்தோம்.

இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நாம் பல இன்னல்களைச் சந்தித்தோம் என்பதை நம்மில் பலர் உணர்ந்தோம். நம்மில் பலர் குடும்பத்தினருடன் தரமான நேரத்தைச் செலவிட ஒரு சிறந்த வாய்ப்பாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமைந்தது ஒரு நேர்மறையானத் தாக்கமாகும். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது பலர் சந்தித்தச் சம்பவங்கள் இந்த டெலிமூவியில் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

குபேன் மகாதேவன் மற்றும் ஹேமாஜி இருவரும் மிக முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாப்பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிப்பையும் வழங்கினர். அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டம் கொடுத்தனர்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட உள்ளூர் இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பணியாற்ற வாய்ப்பு வழங்கியதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்துக் குழு உறுப்பினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

• கார்த்திக் ஷாமலன், இயக்குநர், ஜாலியான ஒரு பொங்கல்

o ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 2-ன் நடிகர்கள் மற்றும் குழுவினர் பங்கேற்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி, ஜாலியானா ஒரு பொங்கல் – இதை இயக்குவதற்க்கான உங்களின் உத்வேகம் யாவை?

இறுதி சீசன் ஓர் உணர்வுப்பூர்வமான ரோலர் கோஸ்டர் பயணமாக இருந்ததால், இரசிகர்கள் பலர் அதீத உணர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டனர். எனவே, நடிகர்களின் நேர்மறை மற்றும் வேடிக்கை நிறைந்த பாகத்தை இரசிகர்களுக்கு வழங்க விரும்பினேன். இதனால், இந்த நிகழ்ச்சியைத் தயாரிக்க முடிவுச் செய்தோம்.

o இந்த நிகழ்ச்சியைப் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துக் கொள்க.

கார்த்திக் ஷாமலன்

ஐந்துப் பிரிவுகளை உள்ளடக்கியப் பொங்கல் தொடர்பான விளையாட்டுகளில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களுக்கு இடையேயானத் தீவிரப் போட்டியைச் சித்தரிக்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏற்றத் துணைப் பிரிவுகள் எங்கள் கைவசம் உள்ளன. அது நிகழ்ச்சியின் மிகவும் வேடிக்கையானப் பகுதியாக இருக்கும். கல்யாணம் 2 காதல் குழுவில் இணைந்து இந்தப் புனிதமானத் திருநாளை ஒன்றாகக் கொண்டாட ஒரு பிரபலமும் இந்த நிகழ்ச்சியில் இணைவார்.