Home நாடு “பொங்கல் மலேசியக் குடும்பங்களிடையே ஒற்றுமையை வளர்க்கும்” – பிரதமர் வாழ்த்து

“பொங்கல் மலேசியக் குடும்பங்களிடையே ஒற்றுமையை வளர்க்கும்” – பிரதமர் வாழ்த்து

951
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : இன்று தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மலேசிய குடும்பங்களுக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்திய சமூகத்தால் கொண்டாடப்படும் இப்பெருநாள் வாழ்க்கை மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது.

#TamilSchoolmychoice

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற எண்ணத்திலும் நம்பிக்கையிலும் பழையதை கழித்து, தை மாதத்தை வரவேற்போம்” என பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் தமிழிலும் மலாய் மொழியிலும் பதிவிட்டார்.

“பொங்கல் திருநாள் அனைத்து மலேசிய குடும்பங்களுக்கும் செழிப்பையும் புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரட்டும். இந்தத் திருநாள் மலேசிய குடும்பங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்க்கும் என்று நம்புகிறேன். பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.” என்றும் இஸ்மாயில் சாப்ரி தனது வாழ்த்துச் செய்தியில் பதிவிட்டார்.