Home நாடு அசாம் பாக்கி விடுமுறையில் செல்ல வேண்டும் – ராய்ஸ் யாத்திம் வலியுறுத்து

அசாம் பாக்கி விடுமுறையில் செல்ல வேண்டும் – ராய்ஸ் யாத்திம் வலியுறுத்து

655
0
SHARE
Ad
டான்ஶ்ரீ ராய்ஸ் யாத்திம்

கோலாலம்பூர் : ஊழல் புகார்களில் சிக்கியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீதான விசாரணைகள் முடியும்வரை விடுமுறையில் செல்ல வேண்டும் என நாடாளுமன்ற மேலவையின் தலைவர் டான்ஶ்ரீ ராய்ஸ் யாத்திம் வலியுறுத்தியுள்ளார்.

ராய்ஸ் யாத்திம் ஊழல் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற சிறப்புக் குழுவுக்கான தலைவருமாவார்.

பொதுவாக அரசாங்க அதிகாரி ஒருவர் மீது குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட்டால் அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவார் அல்லது பணியிலிருந்து விடுமுறையில் செல்லுமாறு பணிக்கப்படுவார் என்றும் ராய்ஸ் யாத்திம் கூறினார்.

#TamilSchoolmychoice

தனக்கு எதிரான விசாரணைகளில் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அசாம்  பாக்கி உறுதியளித்தார்.

தற்போது நடந்து வரும் அசாம் பாக்கி மீதான விசாரணைகள் குற்றவியல் சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, அவர் செய்யத் தவறிய சில கடமைகள் மீதானதாக இருக்கிறது எனத் தான் கருதுவதாகவும் ராய்ஸ் யாத்திம் தெரிவித்தார். எனவே, அசாம் விசாரணைகள் முடியும் வரையில் விடுமுறையில் செல்வதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் ராய்ஸ் தெரிவித்தார்.