Home கலை உலகம் ஆஸ்ட்ரோ உலகில் தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பைப் பார்த்து மகிழுங்கள்

ஆஸ்ட்ரோ உலகில் தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பைப் பார்த்து மகிழுங்கள்

856
0
SHARE
Ad

ஜனவரி 17 & 18 தேதிகளில் ஆஸ்ட்ரோ உலகில் தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பை ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

2022 தைப்பூசம் பற்றிய விபரங்கள்:

• தைப்பூசத்தை முன்னிட்டு, தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பு மற்றும் கட்டுரைகளை ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்திலும் மற்றும் பக்திப் பாடல்களை ராகா வானொலியிலும் மலேசியர்கள் எதிர்பார்க்கலாம். ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் பல்வேறு தைப்பூசச் சிறப்பு ஒளிபரப்பையும் கண்டு மகிழலாம்.

#TamilSchoolmychoice


• ஆஸ்ட்ரோ உலகம் மின்னியல் தளம் வாயிலாக அனைத்து மலேசியர்களும் தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பை பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்வதோடு பக்திக் கட்டுரைகளையும் வாசித்து மகிழலாம். தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம் (ஜார்ஜ் டவுன், பினாங்கு) மற்றும் கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் கோவில் (ஈப்போ, பேராக்), ஆகிய உள்ளூர் ஆலயங்களிலிருந்து நேரலை ஒளிபரப்பு மட்டுமில்லாமல் இந்தியா, இலங்கை, மொரிஷியஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள முருகன் ஆலயங்களிலிருந்து தைப்பூசத்தின் பிரத்தியேகச் சிறப்பம்ச ஒளிபரப்பை மலேசியர்கள் எதிர்பார்க்கலாம். அத்திருத்தலங்கள் பின்வருமாறு:

o இந்தியா: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் (பழனி); அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் (சுவாமிமலை); குமரன் குன்றம் கோவில் (சென்னை); அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (திருச்செந்தூர்); நடுபழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் (மதுராந்தகம்); மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் (கோயம்புத்தூர்).

o இலங்கை: இணுவில் கந்தசுவாமி கோவில் (ஜவ்னா).


o மொரிஷியஸ்: பராசக்தி பீடம் காளி-தண்டாயுதபாணி கோவில் (செபல்).

o பிரான்ஸ்: கோவில் சிவ சௌப்ரமணியன் (ரீயூனியன் தீவு).
ஜனவரி 17, 2022 இரவு 7 மணி முதல் ஜனவரி 18, 2022 இரவு 11.59 மணி வரை ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

• ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தைப்பூசத்தின் பிரத்தியேகச் சிறப்பம்ச ஒளிபரப்பை ஜனவரி 18 காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் இரவு 11.59 மணி வரையிலும் ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் கண்டு மகிழலாம்.

• அதுமட்டும்மின்றி, மலேசியர்கள் 24 மணி நேரப் பக்திப் பாடல்களை ராகா வானொலி அல்லது SYOK செயலி வழியாகக் கேட்டு மகிழலாம்.

• மேல் விபரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகம் எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.