Home நாடு உலுசிலாங்கூர் சுயேச்சை வேட்பாளர் எட்மண்ட் சந்தாராவின் கொள்கை அறிக்கை இன்று வெளியீடு

உலுசிலாங்கூர் சுயேச்சை வேட்பாளர் எட்மண்ட் சந்தாராவின் கொள்கை அறிக்கை இன்று வெளியீடு

800
0
SHARE
Ad

Edmund-Santhara-SLiderஏப்ரல்  24 – 13வது பொதுத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அதிசய பிரவேசம் பிரபல தொழிலதிபர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா.

“மாஸ்டர் ஸ்கில்” என்ற மிகப் பெரிய கல்வி நிறுவனத்தை இளம் வயதிலேயே உருவாக்கி சாதனை படைத்த எட்மண்ட் சந்தாரா, இந்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் மற்ற சுயேச்சை வேட்பாளர்களைப் போல் அல்லாமல், தான் ஒரு தீவிரமான போட்டியாளர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் தனது சொந்த தேர்தல் கொள்கை அறிக்கையையும் தயாரித்து இன்று உலு சிலாங்கூரில் வெளியிடுகின்றார்.

#TamilSchoolmychoice

உலுயாம் பாருவில் இன்று காலை வெளியிடும் தேர்தல் கொள்கை அறிக்கையில் உலு சிலாங்கூர் தொகுதிக்கும் அதன் மக்களுக்கும் தான் செய்யவிருக்கும் பணிகளைப் பற்றியும், சேவைகளைப் பற்றியும் விளக்கமாக பட்டியிலிடும் எட்மண்ட் சந்தாரா தொடர்ந்து பிரச்சாரக் களத்தில் இறங்கி உலு சிலாங்கூர் தொகுதி வாக்காளர்களை சந்திக்கவிருக்கின்றார்.

இங்கே பிகேஆர்-தேசிய முன்னணி வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், தனது அணுகுமுறையாலும், பிரபல்யத்தினாலும், எட்மண்ட் சந்தாரா அவர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார் என்றும் மிகப் பெரியா சவாலாக விளங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.