ஜெருசலம் : இஸ்ரேலியப் படைகளுக்கும் பாலஸ்தீனக் குழுவான ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் வரலாறு காணாத அளவுக்கு பெரும்படையைக் கட்டமைத்து, அந்தப் படையை போரில் இஸ்ரேல் ஈடுபடுத்துகிறது.
அந்த காலத்தில் மன்னர்கள் தங்களின் மகன்களை திலகமிட்டு போர்முனைக்கு அனுப்பும் வழக்கம் இருந்தது. அதே பாணியில், இஸ்ரேல் இராணுவத்தில் தேசிய சேவை அடிப்படையில் பணியாற்ற தன் மகனை இஸ்ரேலிய பிரதமர் வாழ்த்தி அனுப்பியுள்ளார்.
மேற்குக் கரை மற்றும் காசாவில் சுமார் 900 பேர் இதுவரை போரில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.