Home கலை உலகம் ஆஸ்ட்ரோ ‘Inilah KITA’ பிரச்சாரத்துடன் தேசிய தினம்-மலேசிய தினத்தைக் கொண்டாடுகிறது!

ஆஸ்ட்ரோ ‘Inilah KITA’ பிரச்சாரத்துடன் தேசிய தினம்-மலேசிய தினத்தைக் கொண்டாடுகிறது!

315
0
SHARE
Ad

*ஆஸ்ட்ரோ ‘Inilah KITA’ பிரச்சாரத்துடன் தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தைக் கொண்டாடுகிறது

*ஆஸ்ட்ரோவின் KITA அலைவரிசை (அலைவரிசை 100)-ஐ கண்டு களியுங்கள், SYOK FEST KITA அனுபவத்தைப் பெறுங்கள், 6 இலவச அலைவரிசைகளைக் கண்டு மகிழுங்கள் மற்றும், Inilah Hero KITA சமூக நடவடிக்கையில் பங்கேறுங்கள்!

கோலாலம்பூர் – தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15 முதல் செப்டம்பர் 16, 2024 வரையிலானத் தனது ‘Inilah KITA’ பிரச்சாரத்தை ஆஸ்ட்ரோ அறிமுகப்படுத்துகிறது. நமதுச் சமூகத்தில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தி வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடுவதை நோக்கமாக இந்தப் பிரச்சாரம் கொண்டுள்ளது. KITA அலைவரிசை (அலைவரிசை 100), 6 இலவச அலைவரிசைகள், பல்வேறு மலேசியக் கலைஞர்கள் பாடியப் பிரச்சாரத்தின் கருப்பாடல் Inilah KITA, SYOK FEST KITA, Inilah Hero KITA சமூக நடவடிக்கை மற்றும் பலவற்றுடன் ‘Inilah KITA’ பிரச்சாரம் பல அற்புதமான முயற்சிகளைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, யுவன் ஸ்மித் கூறுகையில், “மலேசியர்களின் சாரமானப் பன்முகத்தன்மை, ஒற்றுமை மற்றும் மீள்தன்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பிரச்சாரத்திற்கு ‘Inilah KITA’ என்றுப் பெயரிட்டுள்ளோம். மலேசியாவில் பல இனம், பல மொழி மற்றும் பலக் கலாச்சாரத்திற்க்கு மத்தியில் ஒற்றுமையின் பிரதிபலிப்பான ‘நாம் (KITA)’ எனும் உணர்வைக் கொண்டாடுவதை நாங்கள் இவ்வாண்டில் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு வீட்டிற்கும் பலதரப்பட்ட மற்றும் செழுமையான உள்ளடக்கத்தைக் கொண்டு வரவதோடுச், சமூக உணர்வை வளர்க்கவும், KITA உணர்வைத் தழுவவும் ஆஸ்ட்ரோவில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்தப் பிரச்சாரத்தின் போது, எங்களின் சிறப்பு அலைவரிசையான KITA அலைவரிசையைக் கண்டுக் களிக்கவும், பிரச்சாரக் கருப்பாடலான Inilah KITA-ஐ கேட்கவும், SYOK FEST KITA-இல் கலந்துக் கொள்ளவும், ஆறு இலவச அலைவரிசைகளைக் கண்டுக் களிக்கவும், மற்றும் Inilah Hero KITA சமூக நடவடிக்கையில் பங்கேற்கவும் அனைவரையும் அழைக்கிறோம்.”
ஆகஸ்டு 15 முதல் செப்டம்பர் 16 வரை KITA அலைவரிசை (அலைவரிசை 100) வாயிலாக ஆஸ்ட்ரோ, NJOI மற்றும் sooka ஆகியவற்றில் 100-க்கும் மேற்பட்ட நிர்வகிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுடன் ஒரு மலேசியப் பிராண்டாக ஆஸ்ட்ரோ சிறந்த மலேசியக் கதைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கொண்டாடுகிறது. அதுமட்டும்மின்றி, ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 16 வரை SHOWCASE (CH413), HITS MOVIES (CH401), tvN Movies (CH416), HITS NOW (CH702), ஜீ சினிமா (அலைவரிசை 251), மற்றும் ஆஸ்ட்ரோ தங்கத்திரை (அலைவரிசை 241) ஆகிய ஆறு அலைவரிசைகளை இலவசமாகக் கண்டு இரசிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் KITA அலைவரிசையில் (அலைவரிசை 100) புதிய மற்றும் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்:

• லயன் கேர்ள் (Lion Girl) சகினாவைப் பற்றிய எரிஷா எமிரா நடித்த நாடகம். சிங்க நடனம் மீதான ஆர்வத்தினால் குடும்பம் மற்றும் நட்பின் சவால்களைச் சமாளித்து, மலேசியக் கலாச்சாரத்தைப் பாராட்டி மற்றும் கனவுகளைப் பின்தொடரவே அவர் சிங்க நடனக் கலைஞராகுகிறார்.

• ரோஜிதா சே வான், மாண்டி சோங் மற்றும் சத்தியா காந்தி ஆகிய மூவர் நடித்த நாடகம் ரொம்போங்கான் மக்சிக்ஸ் கே டதாரான் மெர்டேக்கா (Rombongan Makciks Ke Dataran Merdeka), தீயணைப்புப் படை அணிவகுப்பில் கலந்துக் கொண்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கக் கம்போங் வஹாப் சத்துவிலிருந்துச் செல்லும் மூன்று மாந்தர்களின் பயணத்தில் அவர்களின் தோழமையைச் சோதிக்கும் வண்ணம் ஏற்படும் குழப்பமானத் திருப்பங்களுக்கு மத்தியில் வெளிப்படும் உண்மையான ஒற்றுமை மற்றும் விடாமுயற்சியைச் சித்தறிக்கிறது.

• தி மியூசிக் ஜர்னி (The Music Journey), மலேசியப் பாடகர்களானப் பிரிஸ்சில்லா ஏபி, பிர்டவுஸ், 3பி கேவன், யூராயா சீ மற்றும் ரையோத்தா ஆகியோர் மலேசியாவின் பிரபல அசல் பாடல்களைப் பல்வேறுப் பிரசித்துப் பெற்ற இடங்களில் பாடி மலேசியாவின் செழுமையைக் கொண்டாடுவதைக் காண்பிக்கும் ஓர் இசை நிகழ்ச்சி.

• தயாரிப்பாளராகவும் முன்னணி நடிகருமாகவும் டேனேஸ் குமார் இடம்பெறும் ஆஸ்ட்ரோவின் பசங்க சீசன் 2, 100 அத்தியாயங்கள் கொண்ட மலேசியாவின் முதல் உள்ளூர் தமிழ் தொடர் எனும் முத்திரைப் பதிப்பதோடுச் சீசன் 1 மலேசியாவில் அதிகம் பார்க்கப்பட்ட உள்ளூர் தமிழ் தொடர் எனும் சரித்திரத்தையும் படைத்துள்ளது.

• ஓகா & பிரண்ட்ஸ் (Oga & Friends), டிடி & பிரண்ட்ஸ் (Didi & Friends) தொடரைத் தயாரித்த ஸ்டுடியோவின் புத்தம் புதிய உள்நாட்டு அனிமேஷன் தொடர். இது மலேசியக் காட்டில் வாழும் விலங்குகளின் சாகசங்களைச் சித்தறிக்கிறது. இந்தக் கார்ட்டூன் ஆஸ்ட்ரோவின் ரிம்பாகித்தா இ்.எஸ்.ஜி (RimbaKita ESG) நோக்கத்துடன் இணைந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றியச் செய்தியைக் கொண்டுள்ளது.

ஹந்து கரிபாப் (Hantu Karipap), தெரோம்பாக் சானா தெர்துகார் சினி (Terompak Sana Tertukar Sini), கால் மீ ஹேண்சம் – மலேசியா கித்தா (Call Me Handsome – Malaysia KITA), சோபா கென்தாங் செலிபிரிட்டி (Sofa Kentang Selebriti) மற்றும் பல நிகழ்ச்சிகளையும் பேபிலி பியூட் மலேசியாவின் (Family Feud Malaysia) சிறப்பு அத்தியாயங்களையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

‘Inilah KITA’ மலேசிய ஒற்றுமை மற்றும் உள்ளூர் திறமையைக் கொண்டாடுகிறது
உள்ளூர் திறமை மற்றும் மலேசியர்களிடையே ஒற்றுமையைக் கொண்டாடும் Inilah KITA பிரச்சாரக் கருப்பாடலை மலேசியர்கள் எதிர்பார்க்கலாம். பல்வேறு உள்ளூர் கலைஞர்களான ஹேல் ஹுசைனி, வானி கெய்ரி, டேனியல் பாங், ஜோய் லியோங், பாலன் கேஷ் மற்றும் ரோஷினி ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். ஆகஸ்டு 15, 2024 முதல் உங்களுக்குப் பிடித்த ஸ்ட்ரீமிங் தளங்களில் இந்தப் பாடல் கிடைக்கப் பெரும்.
செப்டம்பர் 6 முதல் 8 வரை, செத்தியா சித்தி பார்க் ஓவல் லோனில் இடம்பெறும் மலேசியக் கலாச்சாரப் பண்டிகையின் ஒன்றுகூடலான SYOK FEST KITA-வில் கலந்துக் கொள்ளுங்கள். புலோர் 88, ஹத்தான், மிஷா ஓமார், லுக்மான் பொடோல்ஸ்கி, ஜெய்ன் நக்கால், சியாமில், புங்கா, கிளாவுடியா டான், ஷா, மியூசிக் கிச்சன், அரவிந்த் ராஜ், ஜென், ஜீ யிங், எல்வா, டேனியல் வோங், மக் லாய், காக்கா அஸ்ராஃப், ஜூபிர் கான், எஸ்ரா கைரோ, கே டவுன் கிளான், சாரா சுஹைரி, 53 யுனிவர்ஸ், டே.இ.எப் ஜாம் ஆர்ட்டீஸ் உட்பட 25-க்கும் மேற்பட்ட உள்ளூர் கலைஞர்களையும் உள்ளூர் இசையையும் கொண்டாடும் எங்களுடன் இணையுங்கள்! பொதுமக்களுடன் தொடர்புக்கொள்ளும் வேளையில் மிகவும் அசலான மலேசிய வானொலி அனுபவத்தை அற்புதமான நேரலை மூலம் உருவாக்க மலாய், ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழ் ஆகிய 4 மொழிகளில் 13 வானொலி நிலையங்கள் கூடும் ஆஸ்ட்ரோ வானொலியின் OR1 FM-ஐ செப்டம்பர் 6 கண்டு மகிழுங்கள்.

மலேசியர்கள் ஆஸ்ட்ரோவின் Inilah Hero KITA சமூக நடவடிக்கையில் ஆகஸ்டு 15 முதல் செப்டம்பர் 16 வரை பங்கேற்கலாம். இதில் இரக்கம், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மறைப் போன்ற குணங்களை வெளிப்படுத்தும் முன்மாதிரியான மலேசிய நபர்களின் கதைகளைப் பொதுமக்கள் பகிர்ந்துக் கொள்ளலாம். #InilahKITA என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திச் சமூக ஊடகங்களில் உரைப், படம் அல்லது வீடியோ வடிவத்தில் கதைகளைப் பகிரலாம். Astro AWANI (CH501) மாலை 5 மணிக்கும், KITA (அலைவரிசை 100) இரவு 8.30 மணிக்கும் மலேசியாவைச் சிறந்த இடமாக மாற்றும் ‘Inilah Hero KITA’ நபர்களின் உள்ளூர் கதைகள் இடம்பெறும் Berita Terkini KITA அங்கத்தைக் காணத் தவறாதீர்கள்.

இந்தத் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை ஆஸ்ட்ரோவுடன் KITA உணர்வுடன் கொண்டாடுங்கள். KITA (அலைவரிசை 100)-இல் மலேசியாவின் சிறந்த உள்ளடக்கத்தைக் கண்டு மகிழவும் ஆறு இலவச அலைவரிசைகளைக் கண்டு இரசிக்கவும் 30% தள்ளுபடி மற்றும் இலவச நிறுவலுடன் மாதத்திற்கு ரிம41.99 கட்டணத்துடன் ஆஸ்ட்ரோவின் சந்தாதாரராகுங்கள். SYOK FEST KITA-ஐ தவறவிடாதீர்கள் மற்றும் OR1 FM-இல் ஆஸ்ட்ரோ வானொலியின் நேரலை ஒளிபரப்பைக் காணக் காத்திருங்கள். Inilah Hero KITA நடவடிக்கையில் பங்கேற்பதன் மூலம் சக மலேசியர்களுடன் கைகோர்த்துச் சமூகத்தில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்துங்கள். மேல் விபரங்களுக்கு astro.com.my/InilahKITA எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.