Home இந்தியா கலைஞர் விருதுகள் – ஸ்டாலினிடம் இருந்து பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தா பெற்றனர்

கலைஞர் விருதுகள் – ஸ்டாலினிடம் இருந்து பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தா பெற்றனர்

72
0
SHARE
Ad

சென்னை : 2023-ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்’ பிரபல பாடகி பி.சுசீலாவுக்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் வழங்கப்பட்டன. தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) வழங்கினார்.

“தனது திரை வசனங்கள் மூலமாகத் தமிழ்ச் சமூகத்துடன் உரையாடல் நிகழ்த்தி மாற்றங்களுக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்! அவரது பெயரில் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்’ வழங்கப்படுகின்றன. தன் மயக்கும் குரலால் பல லட்சம் இரசிகர்களின் மனங்களில் குடியேறிவிட்ட ‘தென்னிந்தியாவின் இசைக்குயில்’ பி.சுசீலா அவர்களுக்கும் – வளமான எழுத்துகளால் கோக்கப்பட்ட வைரமாலையெனக் கவிதைகள் படைத்திட்ட கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான விருதினை வழங்கி நிரம்ப மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டேன்” என ஸ்டாலின் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது பி.சுசீலா தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின் சில வரிகளை ஸ்டாலினிடம் பாடிக் காட்டினார்.

கவிஞர் மு.மேத்தாவுக்கு ஸ்டாலின் விருது வழங்கியபோது…