சென்னை: இதுவரை வெளிவந்த தமிழ்ப்படங்களிலேயே அதிக அளவில் வசூலை வாரிக் குவித்த படம் என்ற சாதனை படைத்த படம் “ஜெயிலர்”. ரஜினிகாந்த் நடித்த இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளிவருகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அந்தப் படத்தின் அறிவிப்பு கலகலப்பான ஒரு குறு முன்னோட்டத்துடன் (டீசர்) வெளியிடப்பட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன் இருவரும் தோன்றும் காட்சிகளுடன் ரஜினியின் அதிரடியான சண்டைக் காட்சிகளுடனும் இந்த குறு முன்னோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் 2 படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: