Home இந்தியா டெல்லியின் புதிய முதலமைச்சர் ரேகா குப்தா! மோடி வாழ்த்து!

டெல்லியின் புதிய முதலமைச்சர் ரேகா குப்தா! மோடி வாழ்த்து!

80
0
SHARE
Ad
டெல்லியின் புதிய முதல்வர் ரேகாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் மோடி

புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தல் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்திருக்கும் பாஜக கட்சி சார்பில் ரேகா குப்தா முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆம் ஆத்மி சார்பில் இதற்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பின்னர் அதிஷி பெண் முதல்வராகச் செயல்பட்டு வந்த நிலையில், பாஜகவும் ஒரு பெண் முதல்வரைப் பதவியில் அமர்த்தியுள்ளது.

புதிய முதல்வர் ரேகா குப்தாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“புதிய முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் ரேகா குப்தா அடிமட்ட அரசியல் களத்திலிருந்து எழுந்து வந்தவர். பல்கலைக் கழக மாணவியாக தீவிர அரசியலில் ஈடுபட்டவர். பின்னர் மாநில அளவிலும் நகரமன்ற நிர்வாகத்திலும் செயல்பட்டு தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் முதலமைச்சராகவும் உருவெடுத்துள்ளார். டெல்லி மேம்பாட்டுக்கு அவர் கடுமையாகும், தீவிரமாகவும் உழைப்பார் என நம்புகிறேன். அவர் சிறந்த முறையில் தன் பதவிக் காலத்தில் டெல்லியை வழிநடத்த வாழ்த்துகிறேன்” என மோடி ரேகாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.