Home நாடு எரா எஃப் எம் வானொலி: 3 அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் காவல்துறையில் வாக்குமூலம்!

எரா எஃப் எம் வானொலி: 3 அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் காவல்துறையில் வாக்குமூலம்!

154
0
SHARE
Ad
சர்ச்சைக்குள்ளான எரா எஃப்எம் 3 அறிவிப்பாளர்கள்

கோலாலம்பூர்:சர்ச்சைக்குள்ளான எரா எஃப் எம் வானொலியின் 3 வானொலி அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று புதன்கிழமை (மார்ச் 5) புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு வந்து தங்களின் வாக்குமூலத்தை வழங்கினர்.

நபில் அகமட், ஆசாத் ஜாஸ்மின், ராடின் அமிர் எஃபெண்டி அகமட் அருவானி ஆகிய 3 அறிவிப்பாளர்களும் நேற்று காலை 1.30 மணியளவில் புக்கிட் அமான் வந்தடைந்தனர்.

சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக தங்களின் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அவர்கள் வெளியில் காத்திருந்த பத்திரிகையாளர்களைச் சந்திக்காமலேயே பிற்பகல் 1.10 மணியளவில் அங்கிருந்து வெளியேறினர்.

#TamilSchoolmychoice

வானொலி அறிவிப்பாளர்கள் தவிர எரா எஃப் எம் வானொலியின் நிர்வாகி, ஆஸ்ட்ரோ ஆடியோ இயக்குநர், எரா எஃப் எம் வானொலியின் டிக்டாக் செயலியின் நிர்வகிப்பாளர் ஆகியோர் காவல் துறையின் வாக்குமூலம் வழங்கிய மற்ற மூவராவர்.

இந்து சமயத்தினர் காவடி எடுக்கும் பாணியைக் கிண்டல் செய்து எரா எஃப் எம் வானொலியின் 3 அறிவிப்பாளர்கள் காணொலி ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து இதுவரையில் நாடு தழுவிய அளவில் 44 காவல் துறை புகார்கள் பெறப்பட்டதாகவும் காவல் துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் ஆஸ்ட்ரோ வானொலிகளை நிர்வகிக்கும் ஆஸ்ட்ரோ ஆடியோ வெளியிட்ட அறிக்கையில் பொறுப்பு வாய்ந்த வானொலி ஒலிபரப்பாளர் என்ற முறையில் இந்த சம்பவத்தைத் தாங்கள் கடுமையாகக் கருதுவதாகவும், உடனடி நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தது.