Home நாடு 10 குள்ள யானைகள் மர்மமான முறையில் மரணம்

10 குள்ள யானைகள் மர்மமான முறையில் மரணம்

673
0
SHARE
Ad

Tamil_News_large_63705220130130083930சபா,ஜன,30-சபா மாநிலத்தில் 10 குள்ள யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. சபா மாநிலத்தில் உள்ள காடுகளில் குள்ள வகை யானைகள் பல வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று 10 குள்ள யானைகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்தன.

இந்த யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இறந்த தாய் யானை அருகே குட்டி யானை ஒன்று தாய் யானையை எழுப்ப முயற்சித்த காட்சியைக் காண முடிந்தது.

வனத்துறையினர் அந்த குட்டி யானையை மீட்டு பாதுகாப்பாக மிருக கட்சி சாலையில் விட்டுள்ளனர்.யானைகள் கொல்லப்பட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.