Home உலகம் ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாநிலங்கள்

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாநிலங்கள்

759
0
SHARE
Ad

AustraliaMap-Sliderஆஸ்திரேலியா,ஜன.30- ஆஸ்திரேலியாவில் வீசிய கடும் சூறாவளி மற்றும் மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேன்ட் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரமாக கடும் மழை பெய்து வருகிறது.

இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதுடன், வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து குயின்ஸ் லேன்ட் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளன.

மேலும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க 20க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.