Home நாடு சபா: ஜசெக போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி!

சபா: ஜசெக போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி!

258
0
SHARE
Ad

கோத்தாகினபாலு: சபா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி கண்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது ஜசெக. கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜசெக இந்த முறை 8 தொகுதிகளில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியின் கீழ் போட்டியிட்டது.

தங்களின் தோல்வியை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வதாக ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார். பொதுவாக சீன வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று, போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறுவது ஜசெகவின் வழக்கம்.

ஆனால் இந்த முறை சபா, சபா மக்களுக்கே என்ற முழக்கம் ஓங்கி ஒலித்த நிலையில், மேற்கு மலேசியக் கட்சிகளை நிராகரிக்கும் ஒரு நகர்வாக ஜசெகவின் தோல்வி பார்க்கப்படுகிறது.