Home இந்தியா செங்கோட்டையன் பாஜகவால் அனுப்பப்பட்ட உளவாளியா?

செங்கோட்டையன் பாஜகவால் அனுப்பப்பட்ட உளவாளியா?

553
0
SHARE
Ad
செங்கோட்டையன்

சென்னை: அண்மையில் விஜய்யின் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சில அரசியல் ஆய்வாளர்கள் இன்னொரு கோணத்தில் செங்கோட்டையனின் தவெக நுழைவை விமர்சிக்கிறார்கள். தமிழக அரசியலில் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஆங்கிலச் சொல் ‘ஸ்லீப்பர் செல்’. அதாவது தூங்குபவர் போல எதிரணியில் உள்ளே நுழைந்து ரகசியமாக உளவு பார்ப்பவர் என்பது பொருள். அதிமுகவில் எடப்பாடியுடன் முரண்பட்டதும், செங்கோட்டையன் நேரே சென்றது புதுடில்லிக்கு.

சென்னையில் விமானம் ஏறியபோது ஹரித்துவாருக்கு ஆன்மிகப் பயணம் செல்கிறேன் என்றவர், டில்லியில் விமானம் இறங்கியதும் ஆன்மிகப் பயணத்தை அரசியல் பயணமாக மாற்றி, அமித்ஷாவையும், நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார் – புகைப்படங்கள் எதுவும் எடுத்துக்கொள்ளாமல்!

#TamilSchoolmychoice

சாமர்த்தியமாக, அமித் ஷா ஒரு புதிய பணியைக் கொடுத்து செங்கோட்டையனை தவெக கோட்டைக்குள் அனுப்பி வைத்திருக்கிறார் என்கிறார்கள். இனி தவெகவின் அதிகாரக் கோட்டைக்கு உள்ளே நடப்பவை அமித்ஷாவுக்கு துல்லியமாகத் தகவல்களாகப் பரிமாறப்படும் என்கிறார்கள்.

செங்கோட்டையனுக்கு தரப்படும் மரியாதை, கௌரவம் தவெகவில் சட்டமன்றத் தேர்தல்வரை இப்படியே தொடருமா அல்லது கால ஓட்டத்தில் அவரும் தன் முக்கியத்துவத்தை இழந்து விடுவாரா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.