
கோலாலம்பூர்: அமைச்சர்களாகப் பதவி வகிக்கும் 3 பேர் மீண்டும் ஒரு தவணைக்கு செனட்டர்களாக நியமிக்கப்படவுள்ளனர். நாளை புதன்கிழமை (டிசம்பர் 3) அவர்கள் செனட்டர்களாக பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொள்வர்.
பிரதமர் துறையில் சமய விவகாரங்களுக்கான அமைச்சராக இருக்கும் டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ரி அப்துல் காதிர் ஆகியோரே அந்த மூவர்.
இந்த மூவரும் செனட்டர்களாக மீண்டும் நியமிக்கப்படுவதைத் தொடர்ந்து அவர்களின் அமைச்சுப் பொறுப்புகளில் அவர்கள் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் மூவருமே 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி செனட்டர்களாக முதல் தவணைக்கு நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
மேலும் சில செனட்டர்களின் தவணைக் காலம் முடிவுக்கு வரும் நிலையில் அவர்கள் மீண்டும் நியமிக்கப்படுவார்களா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.





