Home உலகம் பாகிஸ்தானில் இன்று தேர்தல் தாக்குதல் நடத்துவோம் தலிபான்கள் எச்சரிக்கை

பாகிஸ்தானில் இன்று தேர்தல் தாக்குதல் நடத்துவோம் தலிபான்கள் எச்சரிக்கை

455
0
SHARE
Ad

talibanஇஸ்லாமாபாத், மே 11- பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.

தேர்தல் நாளில் நாடு முழுவதும் தற்கொலைப்படை, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தெரிக் இ தலிபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் முதல் முறையாக ஜனநாயக அரசு ஒன்று 5 ஆண்டுக் கால பதவிக்காலத்தை பூர்த்தி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த ஜனநாயக அரசை தேர்ந்தெடுக்கும் வகையில் இன்று பொதுத் தேர்தல் நடக்கிறது.

#TamilSchoolmychoice

ஆனால், இதற்கு தெரிக் இ தலிபான் அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் பிரசாரங்களை சீர்குலைக்கும் வகையில், தலைவர்களுக்கு மிரட்டல் விடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது, வேட்பாளர்களை கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது.

இதன் உச்சக்கட்டமாக நேற்று முன்தினம், முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் அலி ஹைதர் கடத்தப்பட்டார்.

இந்நிலையில், தெரிக் இ தலிபான் அமைப்பின் தலைவரான ஹகிமுல்லா மெஹ்சூத், தன்னுடைய தீவிரவாத கமாண்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்று புலனாய்வுத்துறையினர் வசம் சிக்கியுள்ளது.

அதில், ‘‘ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை. இதனால் தேர்தல் நாளில் நாடு முழுவதும் தற்கொலைப்படை, வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும். கைபர் பக்துன்குவா மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடக்க உள்ள தாக்குதல்களுக்கு நான் பொறுப்பு ஏற்கப்போகிறேன். உங்கள் மாகாணத்தில் நீங்கள் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.