Home நாடு பிரதமரின் செயலாளர் ரவீன் பொன்னையா பதவி விலகல்?

பிரதமரின் செயலாளர் ரவீன் பொன்னையா பதவி விலகல்?

554
0
SHARE
Ad

ravin ponniah

கோலாலம்பூர், மே 22 – பிரதமர் அலுவலகத்தில் இந்திய சமூகத்தினரின் பிரச்சனைகளை கவனித்துக் கொள்ளும் பிரமர் நஜிப் துன் ரசாக்கின் சிறப்பு செயலாளரான டத்தோ ரவீன் பொன்னையா (படம்) தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் அப்துல் படாவியின் மருமகனும், நஜிப் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இளைஞர், விளையாட்டு அமைச்சருமான கைரி ஜமாலுடினுடன் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் தான் ரவீன் பொன்னையா.

#TamilSchoolmychoice

அந்த நட்பு காரணமாக படாவி பிரதமராக இருந்த போது அவரது அலுவலகத்தில் இந்திய சமூகத்தினரின் பிரச்சனைகளை கவனித்து கொள்ளும் சிறப்பு அதிகாரியாக ரவீன் பொன்னையா நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு படாவி பதவி விலகிய போது ரவீன் பொன்னையாவும் தனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இருப்பினும் நஜிப் துன் ரசாக் பிரதமர் ஆக பதவி ஏற்றவுடன் மீண்டும் அவரது செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ரவீன் பொன்னையா பதவி விலக வேதமூர்த்தி காரணமா?

நஜிப் தலைமையிலான புதிய அமைச்சரவையில் துணையமைச்சராக ஹிண்ட்ராப் வேதமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதால், இனி இந்தியர்கள் பிரச்சனையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்படும் என்றும், அதனால் தான் ரவீன் பொன்னையா பதவி விலகுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.