Home நாடு தனது ராஜினாமா குறித்து ரவீன் பொன்னையா விளக்கம் – மேற்படிப்பைத் தொடரப் போவதாக அறிவிப்பு

தனது ராஜினாமா குறித்து ரவீன் பொன்னையா விளக்கம் – மேற்படிப்பைத் தொடரப் போவதாக அறிவிப்பு

585
0
SHARE
Ad

Ravin-Ponniah-Sliderபுத்ரா ஜெயா, மே 25 – பிரதமரின் சிறப்பு அதிகாரி ரவீன் பொன்னையா தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்று கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.

இத்தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ரவீன் பொன்னையா தனது ராஜினாமா குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள விளக்க அறிக்கையில்,

தான் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் குறைந்த வருமான நகர்புற வீட்டு வசதித் துறையில் மேற்படிப்பை (பிஹெச்டி) தொடரவுள்ளதால்,வரும் மே 28 ஆம் தேதியோடு தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

லண்டன் பல்கலைக்கழகத்தில் கட்டிடத் துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சியோடு இளங்கலைப் பட்டமும், பிறகு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உதவியோடு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற  ரவீன் பொன்னையா,

கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போது பிரதமராக இருந்த துன் அப்துல்லா படாவியின் பிரதமர் துறை இலாகாவில் சிறப்பு  அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அப்துல் படாவி பதவி விலகியபோது, ரவீன் பொன்னையாவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டைம் பெர்ஹாட் நிறுவனத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் பணியாற்றினார்.

அதன் பிறகு பிரதமர் நஜிப் துன் ரசாக்கின்  பிரதமர் துறை இலாகாவில் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை கவனிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இது குறித்து ரவீன் கூறுகையில், “கடந்த 8 ஆண்டுகளாக இரு பிரதமர்களிடம்  பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி பெருமை அடைகிறேன். எனது நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் நன்மை செய்யும் ஒரு உயர்ந்த பணியை எனக்கு வழங்கிய அரசாங்கத்திற்கு நன்றி. அதோடு எனது பணியை திறம்பட செய்ய உதவிய எனது குழு, தலைவர்கள் மற்றும் என் மீது அக்கறை கொண்டு என்னை வழி நடத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.