கோலாலம்பூர், ஜூன் 3 – தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பக்காத்தானின் மாபெரும் அமைதிப் பேரணி ஒன்று வருகிற ஜூன் 15 ஆம் தேதி மீண்டும் கோலாலம்பூர் நடைபெறவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் மற்றும் பாதுகாவலர்கள் உதவியோடு இப்பேரணி மிகவும் அமைதியான முறையில் நடைபெறவுள்ளதாகவும் அன்வார் அறிவித்துள்ளார்.
இப்பேரணி, அரங்கத்தில் நடைபெறுமா? அல்லது வீதி ஆர்ப்பாட்டங்கள் போல் நடைபெறுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, விரைவில் அது பற்றிய செய்திகள் வெளியிடப்படும் என்று அன்வார் பதிலளித்துள்ளார்.
அதோடு வருகிற ஜூன் 23 ஆம் தேதி கோலாலம்பூரில், பக்காத்தானின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்து மாநாடு நடத்தப்படவுள்ளதாகவும் அன்வார் அறிவித்துள்ளார்.