மேலும் தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் மற்றும் பாதுகாவலர்கள் உதவியோடு இப்பேரணி மிகவும் அமைதியான முறையில் நடைபெறவுள்ளதாகவும் அன்வார் அறிவித்துள்ளார்.
இப்பேரணி, அரங்கத்தில் நடைபெறுமா? அல்லது வீதி ஆர்ப்பாட்டங்கள் போல் நடைபெறுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, விரைவில் அது பற்றிய செய்திகள் வெளியிடப்படும் என்று அன்வார் பதிலளித்துள்ளார்.
அதோடு வருகிற ஜூன் 23 ஆம் தேதி கோலாலம்பூரில், பக்காத்தானின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்து மாநாடு நடத்தப்படவுள்ளதாகவும் அன்வார் அறிவித்துள்ளார்.