புத்ரா ஜெயா, ஜூன் 11- இந்த ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் வகுப்பில் இடம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ததில் பலருக்கு இடம் கிடைத்து அந்தப் பட்டியலும் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இருப்பினும் நடப்பு ஆண்டில் மெட்ரிகுலேசன் படிப்பிற்கு விண்ணப்பம் செய்து இடம் கிடைக்காமல்இருக்கும் மாணவர்கள் பிரதமர் அலுவலகம் முன் நேற்று அமைதிப் போராட்டம் செய்தனர்.
மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக்கை தலையிடுமாறு வலியிறுத்தினர்.
இவ்விவகாரத்தில் மெட்ரிகுலேஷன் இலாகா எடுத்திருக்கும் முடிவுகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் மகஜர் ஒன்றையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.
கல்வி வாய்ப்புகளில் வெளிப்படையான போக்கை அனுசரிக்கும்படி அம்மகஜர், அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது. மெட்ரிக்குலேஷன் கல்வியின் இரண்டாவது கட்ட மாணவர்கள் சேர்ப்பு புதன்கிழமை தொடங்குகின்ற நிலையில் ஒரு வாரக்காலத்தில் இப்பிரச்சனைக்கு தீர்வுக் காணும்படி மலேசிய இந்திய கல்வி விழிப்பு, சமூகநல அறவாரியத்தின் தலைவர் ஆ.திருவேங்கடம் (படம்) பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.
மொத்தம் 2100 இடங்களுக்கு 6500 இந்திய மாணவர்கள் மனு செய்துள்ள நிலையில் இதுவரை 500 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படுள்ளது என்று அவர் கடுமையாக சாடினார்.
மலேசியாவில் நியாயமான கல்வி கிடைக்க தங்களின் உரிமைகள் கேட்டு இந்திய மாணவர்கள் போராடுகின்றனர். மெட்ரிகுலேஷனில் இந்திய மாணவர்களுக்கு 1500 இடங்கள் ஒதுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக் கடந்தாண்டு அறிவித்தார். ஆனால் அது நடக்கவே இல்லை.
தொடர்ந்து, 2012- 2013 தவணைக்கு இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடங்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறு திருவேங்கடம் மெட்ரிக்குலேஷன் வாய்ப்புக்களை பெறுவதற்கு இந்திய மாணவர்கள் 93.8 மெரிட் புள்ளிகளும், சீன மாணவர்கள் 97 மெரிட் புள்ளிகளும்பெற வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் இலாகா கட்டாயப்படுத்துகின்றது. இது புதிய தகவலாக இருக்கிறது. மஇகாவோ, பிரதமரோ இது பற்றி ஒன்றுமே தெரிவிக்கவில்லை .