Home நாடு லகாட் டத்து ஊடுருவல் விவகாரம்: ஜமாலுதீன் கிராம் விரைவில் கைது செய்யப்படலாம்

லகாட் டத்து ஊடுருவல் விவகாரம்: ஜமாலுதீன் கிராம் விரைவில் கைது செய்யப்படலாம்

694
0
SHARE
Ad

Sulu-Sultan-Jamalul-kiram-Sliderகோலாலம்பூர், ஜூன் 11 – மலேசியாவில் அத்துமீறி தனது படையுடன் நுழைந்து, 10 மலேசியப் பாதுகாப்புப் படையினரின் இறப்பிற்குக் காரணமாக இருந்த சுலுசுல்தானின் வாரிசான ஜமாலுதீன் கிராம் விரைவில் பிலிப்பைன்ஸ் காவல்துறையால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அவர் மீது வெளிநாட்டின் மீது போர் தொடுத்தது, சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதம் வைத்திருந்தது மற்றும் தடைசெய்யப்பட்ட காலத்தில் ஆயுதமேந்தியது ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு பிலிப்பைன்ஸ் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் பிலிப்பினோ அரசாங்கம் ஜமாலுதீன் கிராமை மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டு வருவதாக பிலிப்பைன்ஸ்  நாளிதழ் ‘இண்டெராக்சியான்’ செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜமாலுதீன் கிராம், “எங்களை மலேசியாவிடம் ஒப்படைக்க வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் பிலிப்பைன்ஸ் அரசாங்கமே எடுக்கட்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் பிலிப்பைன்ஸ் அரண்மனை அவரது வேண்டுகோளை ஏற்க மறுத்து அமைதி காக்கும் படி கூறியுள்ளது. எனினும் ஜமாலுதீன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிலிப்பைன்ஸில் கைது செய்யப்படுவார்களா? அல்லது மலேசியாவிடம் ஒப்படைப்பார்களா என்பது இன்னும் தெரியவில்லை.