Home நாடு மெட்ரிகுலேஷன் தவிர்த்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்!- மஸ்லீ

மெட்ரிகுலேஷன் தவிர்த்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்!- மஸ்லீ

880
0
SHARE
Ad

புத்ராஜெயா: எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் மட்டுமே  கவனத்தைச் செலுத்தி வரும் இவ்வேளையில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் தங்களின் கல்வியைத் தொடர முன்வர வேண்டும் எனக் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறியுள்ளார்.

இதுவரையிலும் 5,200 ஆசிரியர் பயிற்சி கல்லூரி நுழைவுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டு விட்டதாகவும்,  6,000 இடங்கள் எனும் இலக்கை இன்னும் அடையவில்லை எனவும் அவர் கூறினார்.

எல்லோரும் மெட்ரிகுலேஷன் வகுப்புக்குள் நுழைவதற்கே மும்முறம் காட்டி வருகிறார்கள். எனவே, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் நிலை மோசமாக உள்ளதுஎன அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக சீனம் மற்றும் தமிழ் மொழி ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்என்று புத்ராஜெயாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் உரையாற்றினார்.

“சிறந்த முடிவுகளைப் பெற்ற மாணவர்கள் ஆசிரியர் தொழிலை பாரம்பரியக் கோட்பாடு எனும் அடிப்படையில் பார்க்கின்றனர். அதாவது, எல்லாக் காலத்திலும் அனைவராலும் தேர்வு செய்யப்பட்ட தொழிலாக பார்த்து தற்போது அதனை ஒதுக்க முற்படுகின்றனர்” என மஸ்லீ தெரிவித்தார்.

“அனைவரும் மருந்துவம், பல் மருத்துவம் மற்றும் கணக்கியல் போன்ற கல்வியை விரும்புகிறார்கள். அதே நேரத்தில் உயிரி தொழில்நுட்பம் மற்றும் நானோ தொழில்நுட்பம் போன்ற படிப்புகள் வரவேற்கத்தக்க நிலையில் இல்லை” என்றும் அவர் கூறினார்.

எனவே, நல்ல தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் துறைகளை அதிகமான மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு ஆராய்ந்து வருவதாக மஸ்லீ கூறினார்.