Home வணிகம்/தொழில் நுட்பம் ஐ-போன் மென்பொருள் உள்ளடக்கங்களின் மாபெரும் மாற்றங்கள் அறிமுகம்!

ஐ-போன் மென்பொருள் உள்ளடக்கங்களின் மாபெரும் மாற்றங்கள் அறிமுகம்!

1020
0
SHARE
Ad

APPLEசான் பிரான்சிஸ்கோ, ஜூன் 12 ஐ-போன்களையும் கணினிகளையும் தயாரிக்கும்  அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், கைத்தொலைபேசிகளுக்கான வர்த்தக சந்தையில் பலத்த போட்டிகள் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து அடுத்த கட் ஐ-போன் தயாரிப்பில் மென்பொருள் உள்ளடக்கங்களில் மாபெரும் மாற்றங்களை அறிமுகப்படுத்துகின்றது.

#TamilSchoolmychoice

சாம்சுங் போன்ற நிறுவனங்களாலும், கூகுள் நிறுவனத்தின் கைத்தொலைபேசிகளுக்கான இயங்கு தளத்தினாலும் ஏற்பட்டுள்ள போட்டியால், தனது நிலைப்பாட்டை தற்காத்துக் கொள்ள இத்தகைய மாற்றங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருகின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டிம் குக், ஐ-போன்களுக்கான மென்பொருள் இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். சான்பிராஸ்சிஸ்கோவில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் மேம்பாட்டாளர்களின் 24வது வருடாந்திர மாநாட்டில் கடந்த திங்கட்கிழமை இந்த அறிமுகத்தை டிம் குக் செய்தார்.

இதன் மூலம் இணைய அஞ்சல் அனுப்புவது, நாள்காட்டி, குறுந்தகவல் அனுப்புதல் போன்ற செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும் என்பதோடு, அதன் அமைப்புகளும் மாறுபடும்.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், உலகம் எங்கிலும் விவேகக் கைத் தொலைபேசிகளின் விற்பனையில், 18 சதவீத சந்தையை ஆப்பிள் நிறுவனத்தின் கைத்தொலைபேசிகள் எட்டிய வேளையில், அண்ட்ரோய்ட் இயங்குதளத்தில் இயங்கும் கைத்தொலைபேசிகளோ 74 சதவீத சந்தையை எட்டிப் பிடித்துள்ளன.

ஐ-போன்கள் விற்பனைக்கு வந்ததிலிருந்து ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஐஓஎஸ் 7 (IOS 7) எனப்படும் மென்பொருள் என டிம் குக் அறிவித்துள்ளார்.

இன்னும் ஒரு மாதத்தில் ஐஓஎஸ் 7 மென்பொருளை உள்ளடக்கமாகக் கொண்ட ஐ-போன்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.