புதுடெல்லி, ஜூன் 18- பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மதச்சார்பற்றவர் என பிரதமர் மன்மோகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவு அக்கட்சியின் உள் விவகாரம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், கூட்டணியிலிருந்து விலகியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு மதச்சார்பற்ற தலைவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த கருத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் தன்னை பாராட்டியது உண்மை என்று கூறிய அவர், இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும், இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியுள்ள ஐக்கிய ஜனதா தளம் 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
மேலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க அக்கட்சி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமரும், பீகார் முதல்வரும் மாறி மாறி பாராட்டி கொண்டது குறிப்பிடத்தக்கது.