Home இந்தியா மன்மோகன் சிங் மறைவு: ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மன்மோகன் சிங் மறைவு: ஸ்டாலின் நேரில் அஞ்சலி

73
0
SHARE
Ad

புதுடில்லி : கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி காலமான இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் நல்லுடலுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, ஆ.ராசா ஆகியோரும் கலந்து கொண்டு மன்மோகன் சிங்குக்கு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

மன்மோகன் சிங் 2 தவணைகளுக்கு பிரதமராக இருந்தவர். அவருக்கு வயது 92.

“இந்தியாவின் தலைசிறந்த மகன்களுள் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எனது இறுதி மரியாதையைச் செலுத்தினேன். வரலாறு அவரை கனிவுடன் நடத்தும் என்பது மட்டுமல்ல, தமது தொலைநோக்கால் ஒரு நாட்டையே மறுசீரமைத்த, தமது பணிவால் கோடிக்கணக்கானோருக்கு ஊக்கமூட்டிய, அடுத்து வரும் தலைமுறைகளுக்கெல்லாம் தமது வாழ்க்கையால் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான கலங்கரை விளக்கமாக விளங்கும் அரிதினும் அரிதான தலைவர்களுள் ஒருவராக வரலாறு அவரது பெயரைப் பொறித்து வைக்கும்” என ஸ்டாலின் தன் முகநூலில் பதிவிட்டார்.