Home One Line P2 முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

876
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவின் முன்னாள் பிரதமரும் நடப்பு நாடாளுமன்ற மேலவை (ராஜ்யசபா) உறுப்பினருமான மன்மோகன் சிங் உடல் நலக் குறைவால் புதுடில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதிய மருந்து ஒன்றை உட்கொண்டதில் அவர் உடல் நலக் குறைவை எதிர்நோக்கியதாகவும், அவருக்குக் காய்ச்சல் கண்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

87 வயதான மன்மோகன் சிங்கின் உடல்நிலை தற்போது சீராக இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் ஆட்சி நடத்திய காலகட்டத்தில், இரண்டு தவணைகளுக்கு 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங்.