Home நாடு பக்காத்தான் கறுப்பு 505 பேரணி – 7 இடங்களில் ஒன்று கூட திட்டம்

பக்காத்தான் கறுப்பு 505 பேரணி – 7 இடங்களில் ஒன்று கூட திட்டம்

482
0
SHARE
Ad

stadium_kelanajayaகோலாலம்பூர், ஜூன் 19 – தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக வரும் சனிக்கிழமை பாடாங் மெர்போக்கில் நடக்கவுள்ள எதிர்கட்சியினரின் கறுப்பு 505 பேரணியில், பக்காத்தான் மற்றும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோலாலம்பூரில் 7 இடங்களில் ஒன்று கூட திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி அவர்கள், பிரிக்பீல்ட்ஸ், தேசியப் பள்ளிவாசல், ஜாலான் புடு, ஜாலான் ராஜா லாவுட்டில் இரண்டு இடங்கள், மலாயா பல்கலைக்கழகம், பெகெலிலிங் ஆகிய இடங்களில் ஒன்று கூடுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தலைவர் பதவி விலக வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்பேரணி நடத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

பேரணி நடைபெறவுள்ள திடலில், மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் சார்பாக வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளது. அந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை சனிக்கிழமையே தொடங்கவேண்டும் என்பதால், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் பேரணி நடத்த அனுமதி மறுத்துள்ளது.

இருப்பினும் பக்காத்தான் தனது முடிவில் உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.