Home 13வது பொதுத் தேர்தல் 505 கறுப்புப் பேரணி: ஜோகூர் பிகேஆர் உறுப்பினருக்கு 6000 ரிங்கிட் அபராதம்!

505 கறுப்புப் பேரணி: ஜோகூர் பிகேஆர் உறுப்பினருக்கு 6000 ரிங்கிட் அபராதம்!

700
0
SHARE
Ad

092e8f7b161fcf35a8badd642b3e7ebcஜோகூர், செப் 26 – பொதுத்தேர்தல் முடிவுகளை எதிர்த்து கடந்த மே மாதம், எதிர்கட்சியினர் நடத்திய கறுப்புப் பேரணியை ஏற்பாடு செய்த குற்றத்திற்காக ஜோகூர் பிகேஆர் கட்சியின் நிர்வாகச் செயலாளர் யுனேஸ்வரனுக்கு ஜோகூர் அமர்வு நீதிமன்றம் இன்று 6000 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

505 கறுப்புப் பேரணிகளை மாநிலம் வாரியாக ஏற்பாடு செய்த எதிர்கட்சியைச் சேர்ந்த பல ஏற்பாட்டாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில், யுனேஸ்வரன் தான் முதல் ஆளாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், தீர்ப்பை எதிர்க்கும் வகையில், யுனேஸ்வரன் அபராதத் தொகையை செலுத்தவில்லை.

#TamilSchoolmychoice

எனவே அவர் இன்று இரவு ஆயர் மோலேக் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று யுனேஸ்வரனின் வழக்கறிஞர் ஹசன் அப்துல் கரிம் தெரிவித்துள்ளார்.