Home 13வது பொதுத் தேர்தல் “ஊழல் தேர்தல் ஆணையம் ‘தொகுதி மறுசீரமைப்பு’ செய்வதை பக்காத்தான் அனுமதிக்காது” – அன்வார் எச்சரிக்கை

“ஊழல் தேர்தல் ஆணையம் ‘தொகுதி மறுசீரமைப்பு’ செய்வதை பக்காத்தான் அனுமதிக்காது” – அன்வார் எச்சரிக்கை

643
0
SHARE
Ad

anwar-cloneகோலாலம்பூர், செப் 27 –  தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதை பக்காத்தான் அனுமதிக்காது.

வேண்டுமானால் வெளிப்படையான முறையில், அனைவருக்கும் பொதுவான வகையில் அதை செய்ய வேண்டும் என்று தேசிய முன்னணிக்கு எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நான் முன்னணி அரசாங்கத்தையும், தேர்தல் ஆணையத்தையும் எச்சரிக்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு செய்தல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். தற்போது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் இந்த தேர்தல் ஆணையம் அதை செய்வதை பக்காத்தான் அனுமதிக்காது” என்று அன்வார் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “நான் இது குறித்து பெர்சே அமைப்பின் தலைவர்களான அம்பிகா மற்றும் பாக் சமட்டிடம் பேசிவிட்டேன். இதை நாம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சிவப்பு கோடு (red line) போல் நாம் செயல்படுத்த வேண்டும்” என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

“அதையும் மீறி அவர்கள் தொகுதி மறுசீரமைப்பை செய்தால், சத்தியம் செய்கிறேன் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேவும் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்துவோம்” என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

இந்த தொகுதி மறுசீரமைப்பு இவ்வருட இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில் பக்காத்தான் 52 சதவிகித விருப்ப வாக்குகளைப் பெற்றும் தேர்தலில் தோல்வியடைந்து மத்திய அரசாங்கத்தை கைப்பற்றும் தகுதியை இழந்தது.

இருப்பினும், இந்த தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்படுவதைத் தடுக்க தாங்கள் வைத்திருக்கும் திட்டம் குறித்து அன்வார் விவரிக்கவில்லை.